ஷென்சோவ் -18 (Shenzhou-18) என்ற விண்கலத்தின் மூலம் மூன்று விண்வெளி வீரர்களை சீனா வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பியுள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள
ஜியுகுவான் Jiuquan ஏவுதளத்தில் இருந்து, சீன நேரப்படி நேற்று இரவு சரியாக 8:59 மணிக்கு, லாங் மார்ச் 2F (Long March) ராக்கெட் மூலம், ஷென்சோவ் -18 (Shenzhou-18) விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இது தொடர்பான காட்சிகளை, சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டில் இருந்து விண்கலம் தனியாக பிரிந்து சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக
சென்றடைந்தது. தொடர்ந்து இன்று அதிகாலை சீன விண்வெளி ஆய்வு நிலையத்துடன் விண்கலம் இணைக்கப்பட்டு, விண்வெளி
நிலையத்திற்குள் சீன வீரர்கள் பாதுகாப்பாக சென்றடைந்ததாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, விண்வெளி ஆய்வு நிலையத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள வீரர்கள், வரும் 30 ஆம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.