20 வருடங்கள் கழித்தும்... சொல்லியடித்த கில்லி காம்போ! வைரலாகும் போட்டோ!

மக்களவை தேர்தலின் போது கையில் பேண்டேஜுடன் வந்த நடிகர் விஜயின் கையில் இப்பொழுது காயம் தெளிவாக தெரிந்திருக்கிறது.
விஜய் - தரணி
விஜய் - தரணிட்விட்டர்

மக்களவைத் தேர்தலின்போது வாக்களிப்பதற்காக கோட் படப்பிடிப்பு நடந்துவரும் ரஷ்யாவிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய், நீலாங்கரையில் சென்று வாக்களித்தார். அப்போது, நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சூழ, கடுமையான கூட்ட நெரிசலில் அவர் வாக்களித்தார்.

மக்களவை தேர்தல் 2024 - வாக்களிக்க வந்த த.வெ.க. தலைவர் மற்றும் நடிகர் விஜய்
மக்களவை தேர்தல் 2024 - வாக்களிக்க வந்த த.வெ.க. தலைவர் மற்றும் நடிகர் விஜய்புதிய தலைமுறை

வழக்கமாக சிரித்த முகத்தோடு வாக்களிக்கும் விஜய், இந்த முறை சற்று வாடிய முகத்தோடு சோர்வாகவே காணப்பட்டார். கருப்பு மை வைக்கும் போது, அவரது கையில் வெள்ளை நிறத்தில் பேண்டேஜ் ஒன்று ஒட்டப்பட்டது தெரியவந்தது.

விஜய் - தரணி
தமிழக வெற்றிக் கழக தலைவராக முதல் ஓட்டு; கையில் காயமா? சோர்வாக காணப்பட்ட விஜய்! முழு விவரம்

கோட் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயத்தால், அவர் பேண்டேஜ் ஒட்டியிருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில்தான், பேண்டேஜ் இல்லாமல், கையில் இருக்கும் காயம் தற்போது தெரியவந்துள்ளது.

அவரது நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம், தற்போது ரீ ரிலீஸ் ஆகி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. வசூலிலும் சாதனை படைத்து வருவதால், குஷியான படக்குழுவினர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து, மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

விஜய் - தரணி
“ 'தம்பிக்கு எந்த ஊரு' ரஜினி மாதிரி ரோல்னு விஜய்ட்ட சொன்னேன்!” - கில்லி ரீ-ரிலீஸ் ஷேரிங்க்ஸ்!

அப்போது விஜய் - தரணி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, 20 வருடங்களுக்கு முன் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றோடு ஒப்பிட்டு பகிர்ந்து வருகின்றனர் அவர்களின் ரசிகர்கள்.

20 வருடங்கள் கழித்து சந்தித்துக்கொண்ட விஜய் - தரணி
20 வருடங்கள் கழித்து சந்தித்துக்கொண்ட விஜய் - தரணி

இயக்குநர் தரணி, தயாரிப்பாளர் ரத்னம் மற்றும் விநியோகிஸ்தர் உள்ளிட்டோர் அவரை சந்தித்து மாலை அணிவித்தபோது, அதனை தோளிலேயே வெகுநேரம் பிடித்திருந்தார் விஜய்.

அந்த நேரத்தில்தான், நடிகர் விஜய்யின் இடது கையில் ஏற்பட்ட காயம் வெளிப்படையாக தெரிந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கையில் ஏற்பட்ட காயத்தால்தான், தேர்தலின்போது கூட்ட நெரிசலில் சிக்கி சோர்வுடன் காணப்பட்டார் என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் கையில் காயம்
விஜய் கையில் காயம்

கோட் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் - தரணி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்| “சார்..மைண்ட் வாய்ஸ்ன்னு நெனச்சு”- VIP ‘அழகு சுந்தரம்’ விவேக்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com