‘ரத்னம்’ பட விவகாரம் | “இன்று விஷால் படம் என்றால், நாளை தம்பி விஜய் படம்” - அதிமுக ஜெயக்குமார்!

ரத்னம் பட விவகாரம் : “இன்று விஷால் படத்திற்கு என்றால் நாளை தம்பி விஜய் படத்திற்கும் இதுதான்! தமிழ் சினிமாவிற்கும் இதுதான்! அந்த ஒருவர் நினைக்கும் படம் மட்டும்தான் திரையிடப்பட வேண்டும் என்று அதிகார திமிரில் ஆடுகின்றனர்” - அதிமுக ஜெயக்குமார்
விஷால், விஜய், ஜெயக்குமார்
விஷால், விஜய், ஜெயக்குமார்புதிய தலைமுறை

ரத்னம் படத்தை திருச்சி - தஞ்சாவூர் பகுதியில் உள்ள திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள், திரையரங்கில் வெளியிடாமால் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக நடிகர்
விஷால் குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குரல் கொடுத்துள்ளார்.

Rathnam
Rathnam

நேற்றைய தினம் இவ்விவகாரத்தில் விஷால் வெளியிட்ட ஆடியோவில், “எந்த ஒரு தொடர்பும் இல்லாத நபர் தற்போது திருச்சி, தஞ்சாவூர் பகுதியில் உள்ள திரையரங்கு உரிமையாளர் சங்கத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டு கடிதத்தை அளித்து படத்தை முடக்குகிறார்.

விஷால், விஜய், ஜெயக்குமார்
ஒரு நொடி | ரத்னம் | TILLU Square | BeeKeeper.. இந்த வார தியேட்டர் OTT லிஸ்ட் இதோ.!

மேலும் புகார் கொடுத்த நபருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளரை தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போது அவர்கள் அழைப்பை எடுக்க மறுக்கின்றனர்.

இது குறித்து ஆட்சியர், எஸ்.பி., முதலமைச்சர் என அனைவரிடமும் புகார் அளிக்கப்படும். தன்னுடைய படத்திற்கு இந்த நிலை என்றால் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களுக்கு என்ன நிலை?” என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் விஷாலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இதுகுறித்த தன் எக்ஸ் வலைதள பதிவில் ஜெயக்குமார், “சில தினங்களில் நடிகர் விஷால் அவர்களின் 'ரத்னம்' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் கட்டப்பஞ்சாயத்து செய்து வெளியிட விடாமல் ஏன் தடுக்க வேண்டும்?

அரசியலுக்கு வருவேன் என்றால் இதுதான் கதியா? இதுபோன்ற நெருக்கடிகளால் தமிழ் சினிமா மெல்ல மெல்ல தன் இயல்பை இழந்து வருகிறது! இன்று விஷால் படத்திற்கு என்றால் நாளை தம்பி விஜய் படத்திற்கும் இதுதான்! தமிழ் சினிமாவிற்கும் இதுதான்! அந்த ஒருவர் நினைக்கும் படம் மட்டும்தான் தமிழ் சினிமாவில் திரையிடப்பட வேண்டும் என்று அதிகார திமிரில் ஆடுகின்றனர்” என்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com