ஸ்பைடர்மேன் உடையணிந்து சாகச ரீல்ஸ்| இளம் ஜோடியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய டெல்லி போலீஸ்!

தலைநகர் டெல்லியில் ஸ்பைடர்மேன் மற்றும் ஸ்பைடர் வுமன் உடையணிந்து மோட்டார் சைக்கிளில் ரீல்ஸ் எடுத்த ஜோடி ஒன்று போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளது.
viral video image
viral video imageinsta

முகநூல் மற்றும் இன்ஸ்டா ஆகிய சமூக வலைதளப் பக்கங்களில் ரீல்ஸ் போட்டு லைக்ஸ்களை அள்ளும் பழக்கம், இன்றைய தலைமுறையிடம் அதிகரித்து வருகிறது. அதற்காக, அவர்கள் வித்தியாசமான வீடியோக்களை எடுத்துப் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், தலைநகர் டெல்லியில் ஸ்பைடர்மேன் மற்றும் ஸ்பைடர் வுமன் உடையணிந்து மோட்டார் சைக்கிளில் ரீல்ஸ் எடுத்த ஜோடி ஒன்று போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளது.

அந்த ஜோடி, சூப்பர் ஹீரோக்களைப்போல, ஸ்பைடர்மேன் மற்றும் ஸ்பைடர் வுமன் உடையணிந்து, தென்மேற்கு டெல்லியின் துவாரகாவில் மோட்டார் சைக்கிளில் ரீல்ஸ் எடுத்துள்ளனர். அந்த வீடியோவை தங்களுடைய இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: FACT CHECK| ’நான் ஒரு பெண் அல்ல’ என பரவும் வீடியோ.. ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாலதி லதா பேசியது என்ன?

viral video image
தியேட்டரில் மொத்த டிக்கெட்களையும் வாங்கிய மலேசிய பெண்.. ரீல்ஸ் பதிவில் திட்டித்தீர்த்த நெட்டிசன்கள்!

அந்த வீடியோவிற்கு, ’ஸ்பைடர்மேன் நஜாப்கர் பகுதி 5’ என தலைப்பும் வைத்துள்ளனர். அந்த வீடியோவில், சாலையில் இருவரும் கைகளை விட்டப்படி டூவீலரை ஓட்டிச் செல்கின்றனர். இந்த ரீல்ஸ் வைரலானதைத் தொடர்ந்து, டெல்லி போக்குவரத்து போலீசார் ஆதித்யா என்ற 20 வயது இளைஞரையும் அவருடைய தோழியான அஞ்சலி என்ற 19 வயது பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

’நஜாப்கர் ஸ்பைடர்மேன்’ என்ற பெயரில் சூப்பர் ஹீரோ உடையை அணிந்துகொண்டு டெல்லி தெருக்களில் வலம்வருவது இது முதல் முறை அல்ல. 20 வயதான நஜாப்கர் என்பவர், இந்தியன் ஸ்பைடி அஃபிஷியல் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கை நடத்தி வருகிறார். அவர், தொடர்ந்து இதுபோன்று பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவரது கணக்கை கிட்டத்தட்ட 10,000 பேர் பின்தொடர்பவர்களாக இருக்கின்றனர். தவிர அவருடைய சில வீடியோக்கள் 70,000க்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளன.

இதையும் படிக்க: JEE ரிசல்ட்| "விஞ்ஞானி ஆவதே லட்சியம்".. 100/100 மதிப்பெண் உடன் முதல் ரேங்க் எடுத்த விவசாயி மகன்!!

viral video image
மேற்கு வங்கம்: ரீல்ஸ் எடுக்க குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி! அதிர்ச்சிப் பின்னணி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com