காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம் | “போலீஸ் அந்த பையனை பாதுகாக்குது”- குடும்பத்தினர் கண்ணீர்!

ஈரோடு அருகே காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட பெண் இரண்டே மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீர்.
காதல் திருமணம் செய்த இளம்பெண் விபரீத முடிவு
காதல் திருமணம் செய்த இளம்பெண் விபரீத முடிவுபுதிய தலைமுறை

செய்தியாளர் - ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் நால்ரோடு பகுதியில் சித்ராதேவி என்பவர் தனது மகள்களான நர்மதா மற்றும் மீனா ஆகியோருடன் வசித்து வருகிறார். சித்ராதேவியின் கணவர் உயிரிழந்த நிலையில் சித்ராதேவி மளிகை கடையில் பணிபுரிந்து இரு பெண்களையும் வளர்த்துள்ளார்.

மீனா
மீனா

இந்நிலையில் சித்ராதேவியின் இளையமகள் மீனாவும் மன்னாதம்பாளையம் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவீட்டாரும் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். தொடர்ந்து மன்னாதம்பாளையத்தில் உள்ள யுவராஜ் குடும்பத்துடன் மீனா வசித்து வந்துள்ளார்.

காதல் திருமணம் செய்த இளம்பெண் விபரீத முடிவு
பெரம்பலூர்: சொத்துத் தகராறில் தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் கைது – அதிரவைக்கும் சிசிடிவி காட்சி!

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மீனாவை கணபதிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக, மீனாவின் தாயார் சித்ராதேவிக்கு மீனாவின் மாமியார் வீட்டை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தற்கொலை முயற்சியில் மீனா ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சித்ராதேவி மருத்துவமனை சென்றுள்ளார். ஆனால் அங்கு “மீனாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும்படி அறிவுறுத்தியதால் அங்கு அழைத்துச் சென்றுவிட்டோம்” என அவர்கள் கூறியதாக தெரிகிறது.

திருமணத்தின்போது மீனா - யுவராஜ்
திருமணத்தின்போது மீனா - யுவராஜ்

இதனையடுத்து சித்ராதேவி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வந்து சோதனை செய்த போது, மீனா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தன்று யுவராஜ் - மீனா தம்பதியினர் சண்டையிட்டுக் கொண்டதாகவும்ம், இதில் கோபித்துக்கொண்ட மீனா வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் மீனா தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்கின்றனர் அவரது குடும்பத்தினர்.

திருமணமாகி இரண்டு மாதங்களே ஆகிய நிலையில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் நேற்று மாலை காவல்துறையினர் யுவராஜ் மீது எந்தவித விசாரணையும் எடுக்காமல் இருப்பதாகவும் மீனா தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி உயிரிழந்த மீனாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முறையிட்டனர்.

குறிப்பாக மீனாவின் உடன்பிறந்த அக்கா பேசுகையில், “ஒரு வாரமாவே என் தங்கச்சியை அவங்க டார்ச்சர் பண்ணாங்க. அதுக்கு முன்னாடியும்கூட என்கிட்ட சொல்லி சொல்லி அவ அழுதுட்டே இருப்பா. எந்தப் பிரச்னைன்னாலும் சரியாகிடும் நான் சொல்லிட்டே இருந்தேன். கடைசில இந்த முடிவுக்கு அவளை தள்ளிட்டாங்க. என்ன ஆச்சு, என்ன நடந்துச்சுனு கூட அவங்க வீட்டாளுங்க சொல்ல மாட்றாங்க. போலீஸூம் அந்த பையன் (யுவராஜ்) பக்கம்தான் சப்போர்ட்டா நிக்குது. எஃப்.ஐ.ஆர் கூட ஃபைல் பண்ணல அவங்க. ஸ்டேஷனுக்கு கூட கூட்டிட்டு போகல. அவனுக்காக அவங்க காசு கொடுத்திருக்காங்க... அவன பாதுகாக்குறாங்க. எங்களுக்கு நியாயம் வேணும். என் தங்கச்சி ஏன் இறந்தான்னாச்சும் சொல்ல சொல்லுங்க...” என்றார் கண்ணீருடன்.

காதல் திருமணம் செய்த இளம்பெண் விபரீத முடிவு
‘பூத் ஏஜெண்ட்டா வேலை செஞ்சோம்; ஏன் பணம் தரல?’ - பாஜக நிர்வாகிக்கு பாஜக-வினரே கொலை மிரட்டல்!

மீனாவின் உறவினர் ஒருவர் கூறுகையில், “நாங்க ரெண்டு குடும்பமும் வேற வேற சாதி. கல்யாணம் பண்ணிக்கும்போது நல்லா பாத்துப்போம்னு சொன்னாங்க. நாங்க அப்பவும் ‘இதலாம் சரியா வராது; அந்த ஊரே சாதி வெறி பிடிச்சது’னு எவ்ளவோ சொன்னோம். ‘இல்ல காதலிக்கிறேன், பாத்துக்குறேன்’னு சொன்னா எங்க பிள்ளை.... நம்பி அனுப்புனோம். இப்போ இப்படி ஆகிட்டு. அவங்க வீட்ல இருந்து யாருமே ஹாஸ்பிட்டலுக்குகூட வர்ல. அவனை சுத்தி அவ்ளோ கட்சி ஆளுங்க வந்துட்டாங்க. வழக்கறிஞர்கள் கூட வந்துட்டாங்க உடனேயே.

உயிரிழந்த மீனாவின் சகோதரிகள்
உயிரிழந்த மீனாவின் சகோதரிகள்

எங்க பிள்ளையை கொண்ணுதான் கூட்டிட்டே வந்திருக்காங்க. என்ன பண்ணீங்க எங்க பிள்ளையன்னு நாங்க கேட்டோம். அதுக்கு டி.எஸ்.பி கோகுல கிருஷ்ணன், ‘உன் பிள்ளைய வேணும்னா கொண்டுபோ, இல்லனா தூக்கிட்டுப்போ. உன் இஷ்டத்துக்கு கேஸ் ஃபைல் பண்ண முடியாது’ன்னு சொல்றாரு. காரணம் கேட்டதுக்கே இப்படி சொல்றாங்க. மீடியாவை கூப்பிடறோம்னு சொன்னதும் எல்லாரும் போயிட்டாங்க... ஒரு போலீஸ்கூட எங்களுக்காக பேசல. எப்படி எங்க பிள்ளை செத்துச்சுனு கேட்டோம்... அதுலயே அவ்ளோ முரண். ஏதேதோ சொல்றாங்க. உண்மையை சொல்லவே மாட்றாங்க” என்றார் ஆதங்காத்துடன்

இதன்பின்னர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இருப்பினும், “வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வரும் நிலையில் தனியாக புகார் கொடுக்கும் பட்சத்தில் விசாரணை நடத்தப்படும்” என விளக்கமளித்தனர். இதனையடுத்து மீனாவின் உறவினர்கள் மீனா தற்கொலைக்கான முழு காரணமும் வெளிப்படையான விசாரணையும் நடத்த வேண்டும் என புகார் மனுவை வழங்கினர்

காதல் திருமணம் செய்த இளம்பெண் விபரீத முடிவு
“செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை” - அமலாக்கத்துறை புகார்!

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com