ஒரு வருடத்துக்கு முன்பு காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகி.. பக்ரைனில் சடலமாக மீட்பு!

ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல்போன தாய்லாந்து நாட்டின் மாடல் அழகியின் சடலம் பக்ரைனில் உள்ள பிணவறை ஒன்றில் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கைகன் கென்னகம்
கைகன் கென்னகம்ட்விட்டர்

வடக்கு தாய்லாந்தைச் சேர்ந்தவர் கைகன் கென்னகம். 31 வயதான இவர், தாய்லாந்தின் மாடல் அழகியும் ஆவார். தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வேலை தேடி 3 ஆண்டுகளுக்கு முன்பு பஹ்ரைன் சென்றுள்ளார். அங்கு, அவருக்கு ஓர் உணவகத்தில் வேலை கிடைத்தது. அத்துடன் பஹ்ரைனில், ஒருவரைக் காதலிப்பதாகவும் தன் குடும்பத்தினரிடம் கைகன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அவர், தன் குடும்பத்தைத் தொடர்புகொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கவலைப்பட்டதுடன், நடப்பு ஆண்டின் ஜனவரி மாதத்தில், தாய்லாந்து தூதரகத்தின் உதவியை அவர்கள் நாடியுள்ளனர். ஆனால் அவர்களால் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையும் படிக்க: RCBயிடம் வீழ்ந்தது SRH.! சொதப்பிய பேட்டர்களால் வருத்தத்தில் காவ்யா மாறன்.. #viralphotos #Viralvideo

கைகன் கென்னகம்
’இந்தியர்களுக்கு விசா தேவையில்லை’ - அதிரடியில் இறங்கிய தாய்லாந்து! ஏன் தெரியுமா?

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தாய்லாந்து தூதரகம் கைகன் குடும்பத்தினரை அழைத்து சல்மானியா மருத்துவ வளாகத்தின் பிணவறையில் சடலம் ஒன்று உள்ளது. அது, ’உங்களது மகளா என அடையாளப்படுத்த முடியுமா’ எனக் கேட்டுக்கொண்டது. அதன்படி, அவர்களும் கைகன் கென்னகத்தின் காலில் பச்சை குத்தப்பட்டிருந்த அடையாளத்தை உறுதிப்படுத்தினர்.

Death
DeathFile Photo

அதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் கைகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளனர். அவர் விஷம் கலந்த ஆல்கஹாலைச் சாப்பிட்டு மரணத்தைத் தழுவியிருக்கிறார் என ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்தே அவரது குடும்பத்தினர், கைகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: சீனியர்கள் இல்லாமலே வீறுநடை போடும் கத்துக்குட்டி நியூசி., அணி! சொந்த மண்ணில் பாக். மீண்டும் தோல்வி!

கைகன் கென்னகம்
மார்டன் உடையில் ஆண் நண்பர்களுடன் டான்ஸ்.. வீடியோ வைரலானதால் மலேசிய அழகு ராணி பட்டத்தை இழந்த அழகி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com