காலை தலைப்புச் செய்திகள் | 2ம் கட்ட வாக்குப்பதிவு சதவீதம் ஒலிம்பிக் செல்லும் தமிழக வீராங்கனை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சதவீதம் முதல் அமெரிக்காவில் கருப்பினத்தவர் மரணம் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
காலை தலைப்புச் செய்திகள்
காலை தலைப்புச் செய்திகள்puthiya thalaimurai
  • இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் சுமார் 61 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன். மணிப்பூர், திரிபுராவில் 78 விழுக்காடுக்கு மேலும், உத்தரபிரதேசத்தில் 55 விழுக்காடிற்கும் குறைவாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

  • கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 70 விழுக்காடு வாக்குகள் பதிவும், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 60 விழுக்காடுக்கும் கீழ் வாக்குப்பதிவு நடைப்பெற்றுள்ளது.

  • இரண்டாம் கட்ட தேர்தலில் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

  • இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். பின்னர் என்.டி.ஏ கூட்டணிக்கு கிடைத்த ஆதரவு எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றமளிக்கப் போவதாக விமர்சனம் செய்துள்ளார்.

  • மக்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டு காலி சொம்பை கொடுக்கிறது பாஜக என கர்நாடகா தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி பாஜக மீது கடும் விமர்சனம்

பாஜக மீது ராகுல் காந்தி விமர்சனம்

#RahulGandhi | #Congress | #BJP
பாஜக மீது ராகுல் காந்தி விமர்சனம் #RahulGandhi | #Congress | #BJP
  • கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 14ஆவது நபராக தாஹா நசீர் மீது இந்திய அரசுக்கு எதிராக போர்தொடுக்க சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  • அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இன்று மாலை எஞ்சிய தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இறுதி செய்கிறது காங்கிரஸ் கட்சி.

காலை தலைப்புச் செய்திகள்
‘நீ உள்ள... நான் வெளிய...’ - உ.பி.யில் ராகுல், பிரியங்காவை வைத்து காங்கிரஸ் போடும் தேர்தல் கணக்கு!
  • பாஜக மாவட்ட பொதுச்செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கில், அக்கட்சியை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காலை தலைப்புச் செய்திகள்
‘பூத் ஏஜெண்ட்டா வேலை செஞ்சோம்; ஏன் பணம் தரல?’ - பாஜக நிர்வாகிக்கு பாஜக-வினரே கொலை மிரட்டல்!
  • ஓடும் ரயிலில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், நயினார் நாகேந்திரன் தொடர்புடைய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • சென்னையில் போலி வங்கிக் கணக்குகள் மூலம் மூன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில், 5 வங்கி ஊழியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • “எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என மத்திய அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்PT
  • சேலத்தில் நீர்மோர் பந்தலை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நிலையில், நுங்கு மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றை போட்டிப்போட்டு தொண்டர்கள் அள்ளிச்சென்றனர்.

  • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ பரவிய நிலையில், நெருப்பை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

  • புதிய நாடாளுமன்ற கட்டத்தின் மேல் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய வீரர்கள்... இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒத்திகை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

  • மேற்குவங்கம் சந்தேஷ்காளியில் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தது சிபிஐ. இந்நிலையில், சம்பவ இடத்தில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஆய்வு நடத்தினர்.

  • ஐதராபாத் அருகே மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அவ்விபத்தில், 50 ஊழியர்களை தனி ஒருவனாக மீட்டிருக்கிறான் சிறுவன் ஒருவன்.

  • அமெரிக்காவில் காவல்துறையினர் கைது செய்யும் போது மேலும் ஒரு கருப்பினத்தவர் மரணம் அடைந்துள்ளார். இந்நிலையில், காவல்துறையினரே மரணத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • ஒலிம்பிக் போட்டிக்கு 2வது முறையாக தகுதி பெற்றார் தமிழக பாய்மரப் படகு வீராங்கனை நேத்ரா குமணன். இதற்கு, பிரதமர் மோடி மற்றும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  • ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வெற்றி அடைந்துள்ளது. 262 ரன்களை விரட்டிப் பிடித்து வரலாற்றில் அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற பெயரை பெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com