[X] Close

ராஜஸ்தானில் நடைமுறைக்கு வந்த 15 நாட்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகள்!

இந்தியா,கொரோனா வைரஸ்

Lockdown-like-curbs-in-Rajasthan-for-15-days-from-today

ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு மிகவேகமாக அதிகரித்து வருவதால் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த இன்று முதல் 15 நாட்களுக்கு அலுவலகங்கள் மற்றும் சந்தைகளை மூடுவது உள்ளிட்ட பல புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.

ராஜஸ்தான் அறிவித்துள்ள புதிய பொதுமுடக்க கட்டுப்பாடுகள், இன்று அதிகாலை 5 மணி முதல் மே 3 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை 15 நாட்கள் மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும்.

இந்த கட்டுப்பாடுகளின்படி அத்தியாவசிய சேவைகளை வழங்கும் கடைகள் மற்றும் அலுவலகங்கள் மட்டுமே 15 நாள்கள் பொதுமுடக்க காலகட்டத்தில் திறக்கப்படும் என்று மாநில உள்துறை செயலாளர் அபய் குமார் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு அதிகாரிகள், காவல்துறை, வீட்டுக் காவலர்கள், தீயணைப்பு சேவை அதிகாரிகள், பொதுப் போக்குவரத்து ஊழியர்கள், குடிமை அதிகாரிகள், எலக்ட்ரீசியன், தூய்மைப்பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அடையாள அட்டைகளுடன் பயணிக்கும் மருத்துவர்களின் போக்குவரத்திற்கு எந்த தடையும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

image

பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் விற்கும் கடைகள் மற்றும் மளிகைக் கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். ஆனால் சைக்கிள்-ரிக்ஷாக்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் மொபைல் வேன்களில் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்வது இரவு 7 மணி வரை அனுமதிக்கப்படும்.

அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை மட்டும் செய்தித்தாள்களை விநியோகிக்க அனுமதிக்கப்படுவார்கள். மாநிலத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான ஆர்டி-பிசிஆர் சோதனை அறிக்கையை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் இந்த ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.


Advertisement

ஏற்கெனவே, ராஜஸ்தான் அரசு அனைத்து கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களையும் ஏப்ரல் 30 வரை மூடவும் உத்தரவிட்டது. தனியார் விழாக்கள், திருமணங்களில் விருந்தினர்களின் எண்ணிக்கை 50 பேரும், இறுதிச் சடங்கிற்கு 20  நபர்கள் மட்டும்  அனுமதிக்கப்படுவார்கள் என்றும், சினிமா அரங்குகள், மல்டிபிளெக்ஸ் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை மூடவும் அரசு உத்தரவிட்டது.


Advertisement

Advertisement
[X] Close