Accused
Accusedpt desk

சென்னை: போலி நிறுவனம் மூலம் ரூ.1.57 கோடி மோசடி - வங்கி ஊழியர்கள் உட்பட 8 பேர் கைது

தனியார் வங்கியில் போலியான வங்கி கணக்கை ஆரம்பித்து தனிநபர் கடன் பெற்று மோசடி செய்ததாக 3 பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
Published on

செய்தியாளர்: ஆனந்தன்

ஐசிஐசிஐ வங்கியில் போலியான நிறுவனம் பெயரில் வங்கி கணக்கு துவங்கி 3.57 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்த வங்கியின் மேலாளர் ரங்கநாதன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

Arrested
Arrestedpt desk

விசாரணையில், சென்னையைச் சேர்ந்த சதீஷ், அவரது மனைவி சர்மிளா மற்றும் உறவினர் தனசேகர் ஆகியோர் ஐஆர்எஸ் எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் போலியான சம்பள கணக்கை துவங்கி இதன் மூலம் 59 தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என வங்கியை நம்ப வைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

அவர்களை இதைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடனாக 3 கோடியே 57 லட்சம் ரூபாய் கடனாக பெற்று திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியதும் தெரியவந்தது.

Accused
சென்னை விமான நிலையத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு - காரணம் இதுதான்!

இந்த மோசடிக்கு ஐசிஐசிஐ வங்கியின் ஊழியர்களான ஜவகர் பெருமாள், சசிரேகா ஆகியோரும் உடந்தையாக இருந்து வங்கியை ஏமாற்றி கடன் பெற்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சதீஷ், அவரது மனைவி சர்மிளா, தனசேகர் வங்கி ஊழியர்கள் ஜவகர் பெருமாள், சசிரேகா, கார்த்திக், சதீஷ்குமார், மகாலட்சுமி, உள்ளிட்ட 8 பேரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com