நாடாளுமன்ற கட்டிடத்தின் மேல் பறந்த ஹெலிகாப்டர்! எதற்காக தெரியுமா?

நாடாளுமன்றத்தின் பழைய வளாகத்தில், தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற கட்டிடம்
நாடாளுமன்ற கட்டிடம்முகநூல்

டெல்லியில் நாடாளுமன்றத்தின் பழைய வளாகத்தில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று பாதுகாப்பு ஒத்திகை நிகழ்த்தினர்.

அண்மையில் நாடாளுமன்றத்திற்குள் இளைஞர்கள் இரண்டு பேர் நுழைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுந்தது. எதிர்க்கட்சிகளும் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரச்னை எழுப்பின.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பழைய வளாகத்தில், தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் நேற்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற கட்டிடம்
காலை தலைப்புச் செய்திகள் | 2ம் கட்ட வாக்குப்பதிவு சதவீதம் ஒலிம்பிக் செல்லும் தமிழக வீராங்கனை வரை!

அப்போது ஹெலிகாப்டரிலிருந்து நாடாளுமன்ற வளாகத்திற்குள் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் தரையிறங்குவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த ஒத்திகை நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com