“பிரதமர் மேடையிலேயே அழக்கூடிய நிலையும் வரலாம்” - ராகுல் காந்தி பேச்சு!

“பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளது அவரது பேச்சிலேயே தெரிகிறது. மேடையிலேயே அவர் அழக்கூடிய நிலையும் வரலாம்” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி  - பிரதமர் மோடி
பிரதமர் மோடி - பிரதமர் மோடி முகநூல்

கர்நாடக மாநிலத்தில் 2ஆம் கட்ட மக்களவை தேர்தல் 14 தொகுதிகளில் வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பரப்புரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விஜயபுராவில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்திமுகநூல்

அப்போது தனது உரையில், “தேவையற்ற விஷயங்களை பேசி முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்பி வருகிறார் பிரதமர். விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, வறுமை ஒழிப்பு குறித்து பிரதமர் பேசுவதே இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி விலைவாசியை குறைக்க முடியும்.

பிரதமர் மோடி  - பிரதமர் மோடி
EVM வழக்கு | "உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு I.N.D.I.A கூட்டணிக்கு கிடைத்துள்ள அறை" பிரதமர் மோடி

நாட்டில் உள்ள ஏழைகளிடம் பணத்தை பறித்து தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு பிரதமர் தந்து வருகிறார் பிரதமர். நாட்டில் உள்ள ஒரு சதவீதம் பேரிடம் 40% சொத்துகள் குவிந்து கிடக்கிறது. பணக்காரர்களிடம் குவிந்துள்ள பணத்தை திரும்பப்பெற்று ஏழைகளுக்கே திரும்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது” என்று ராகுல்குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி  - பிரதமர் மோடி
”மக்களின் சொத்துக்களை காங்கிரஸ் அபகரித்துவிடும்” - மோடி Vs ராகுல்.. முற்றும் வார்த்தைப்போர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com