Published : 17,Apr 2021 12:51 PM
மதுரை: விவேக் மறைவு... மரக்கன்றுகள் வைத்து அஞ்சலி செலுத்திய இயற்கை ஆர்வலர்கள்

மதுரையில் நடிகர் விவேக் மறைவிற்கு மரக்கன்று வைத்து இயற்கை ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் விவேக் மறைவையடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மதுரை தனக்கன்குளம் பகுதியில் 'மரம் வளர்ப்போம் வாங்க' என்ற அமைப்பினர் விவேக்கின் உருவப்படத்திற்கு மலர் தூவியும், மரக்கன்றுகளை வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த அமைப்பினர் மறைந்த விவேக்கின் ஆலோசனைபடி மரக்கன்றுகளை நட்டு வந்த நிலையில் அவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மரக்கன்றுகளை வைத்து அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியடைய செய்தது.
இதேபோன்று விவேக் மறைவிற்கு அப்பகுதி பொதுமக்களுக்கும் சிறுவர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.