சீனியர்கள் இல்லாமலே வீறுநடை போடும் கத்துக்குட்டி நியூசி., அணி! சொந்த மண்ணில் பாக். மீண்டும் தோல்வி!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் கத்துக்குட்டியான நியூசிலாந்து அணி, அவ்வணியை மீண்டும் வீழ்த்தி 2-1 என முன்னிலை வகிக்கிறது
pak vs nz
pak vs nztwitter

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, அங்கு நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் கைவிட்டப்பட்ட நிலையில், 2வது போட்டியில் பாகிஸ்தானும், 3வது போட்டியில் நியூசிலாந்தும் வெற்றிபெற்றுள்ளன. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சமனில் இருந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 25) 4வது டி20 போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை முதலில் பேட் செய்யக் கேட்டுக்கொண்டது. இதைத் தொடர்ந்து வழக்கம்போலவே பாகிஸ்தான் தொடருக்கான நியூசிலாந்து அணியில் முன்னணி நட்சத்திர வீரர்கள் இல்லாத கத்துக்குட்டி படையே இந்தப் போட்டியிலும் களமிறங்கியது.

இதையும் படிக்க: கர்நாடக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு | மோடி பேச்சுக்கு காங். பதிலடி... கூட்டணிக் கட்சிக்கு சிக்கல்?

pak vs nz
நட்சத்திர வீரர்கள் யாருமே இல்லை.. ஆனாலும் பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்திய நியூசிலாந்து அணி!

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அவ்வணியின் தொடக்க வீரர் டிம் ராபின்சன் 36 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் அப்பாஸ் அஃப்ரிடி 3 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்து, 4 ரன்களில் தோல்வியைத் தழுவியது.

இதன்மூலம் கத்துக்குட்டியான நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான நியூசிலாந்து அணியில் முன்னணி வீரர்களான வில்லியம்சன், பவுல்ட், கான்வே, ஆலன், செளத்தி, ஃபெர்குஷன், ஹென்றி, மிட்செல், பிலிப்ஸ், ரச்சின், சாண்ட்னர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதில் சிலர் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சிலர் காயத்தால் அவதிப்பட்டு உள்ளனர்.

இதையும் படிக்க: ஜிம்பாப்வே | சீறிப் பாய்ந்த சிறுத்தை.. போராடிய நாய்.. தப்பிப் பிழைத்த கிரிக்கெட் வீரர்!

pak vs nz
SA vs NZ | 92 ஆண்டு கனவு... 18ஆவது முயற்சி... கனவை நனவாக்கிய நியூசிலாந்து அணி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com