“டி20 WC-ல் இந்தியாவை வழிநடத்த ரோகித் தகுதியற்றவர்..” - முன்னாள் KKR டைரக்டர் அதிர்ச்சி கருத்து!

நடப்பு ஐபிஎல் முடிவடைந்த பிறகு டி20 உலகக்கோப்பை ஜூன் 2ம் தேதிமுதல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்திய அணியை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்தவிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு எதிராக பேசியிருக்கிறார் கேகேஆர் அணியின் முன்னாள் டைரக்டர் ஜாய் பட்டாச்சார்யா
ரோகித் சர்மா
ரோகித் சர்மாx

நடப்பு 2024 ஐபிஎல் தொடர் வரும் மே 26-ம் தேதி முடிவடையவிருக்கும் நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரானது ஜூன் 2-ம் தேதியிலிருந்து தொடங்கவிருக்கிறது. இதில் எந்த 11 வீரர்களை இந்திய அணி உலகக்கோப்பைக்குள் எடுத்துச்செல்லப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு இருந்துவரும் நிலையில், பல்வேறு முன்னாள் வீரர்கள் அவர்களுடைய 11 வீரர்கள் கொண்ட இந்திய அணியை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், பினிசர் மற்றும் வேகப்பந்துவீச்சாளருக்கான இடங்கள்தான் இந்திய அணிக்கு பிரச்னையாக இருந்துவரும் நிலையில், அந்த இடத்தில் எந்த வீரர்களை இந்திய அணி தேர்ந்தெடுக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணிpt web

இந்நிலையில் வரும் ஏப்ரல் 28 அல்லது ஏப்ரல் 30ம் தேதி டெல்லியில் சந்திக்கவிருக்கும், இந்திய கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மூவரும் இணைந்து இந்திய அணியை அறிவிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரோகித் சர்மா
‘ஒரே போட்டியில் 2 பேரின் ஓய்வை உறுதிசெய்த பண்ட்..’! 73 ரன்கள் வாரிவழங்கி மோஹித் சர்மா மோசமான சாதனை!

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை வழிநடத்த ரோகித் தகுதியற்றவர்..

இதற்கிடையே டி20 உலகக்கோப்ப குறித்து பேசியிருக்கும் கேகேஆர் அணியின் முன்னாள் டைரக்டர் ஜாய் பட்டாச்சார்யா, ரோகித் சர்மா டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை வழிநடத்த தகுதியற்றவர் என்றும், தொடக்க வீரராக வேறுவீரர்தான் விளையாட வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா
ரோகித் சர்மா

கிறிக்பஸ் உடன் பேசியிருக்கும் பட்டாச்சார்யா, “ரோகித் சர்மா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, அவர் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதேநேரம் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்கும் முடிவு இந்தியஅணிக்கு பாதகமாக இருக்கலாம். இந்த கட்டத்தில், T20I வடிவத்தில் இந்தியஅணியை வழிநடத்த ரோகித் சர்மா சிறந்த தேர்வு அல்ல. அவருக்கு பதிலாக ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக தேர்வு செய்யவேண்டும், ஏனெனில் பும்ராவின் பந்துவீச்சு திறமை அணிக்கு முக்கிய பங்குவகிக்கும் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அதேநேரம் ரோகித் சர்மாவின் எண்ணங்களை பாராட்டிய பட்டாச்சார்யா, “ரோகித் சர்மா கிரிக்கெட்டில் அனைத்தையும் சாதித்துவிட்டார், ஆனால் அவர் செய்ய வேண்டிய ஒன்று உலகக் கோப்பையை வெல்லவேண்டும். அவர் 2007 டி20 உலகக் கோப்பையை வென்றதோடு மட்டுமில்லாமல், தனது கிரிக்கெட் வாழ்க்கையை மேலும் ஒரு உயர்நிலையில் முடிக்க விரும்புகிறார், அதை நாங்கள் புக் எண்டிங் என்று அழைக்கிறோம். இது ஒரு சிறந்த சிந்தனை” என்றார்.

ரோகித் சர்மா
“நாங்கள் வெற்றிக்கு திரும்பிவிட்டால் என்ன நடக்கும் என்று தெரியாது..” - RCB வீரர் நம்பிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com