‘பூத் ஏஜெண்ட்டா வேலை செஞ்சோம்; ஏன் பணம் தரல?’ - பாஜக நிர்வாகிக்கு பாஜக-வினரே கொலை மிரட்டல்!

பூத் ஏஜெண்டாக பணியாற்றியதற்கு பணம் தரவில்லை என குற்றஞ்சாட்டி, பாஜக மாவட்ட பொதுச் செயலாளருக்கு அக்கட்சியினரே கொலை மிரட்டல்; இதுதொடர்பாக பாஜகவினர் 8 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு.
பாஜக தென் சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் முத்துமாணிக்கம்
பாஜக தென் சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் முத்துமாணிக்கம்புதிய தலைமுறை

செய்தியாளர் - சாந்த குமார்

தென் சென்னை கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலாளராக இருப்பவர் முத்துமாணிக்கம். இவர் கடந்த 20 ஆம் தேதி துரைப்பாக்கம் மேட்டுக்குப்பத்தில் உள்ள பாஜக மண்டல தலைவர் ஜெகநாதன் என்பவரின் வீட்டில் அமர்ந்து, நாடாளுமன்ற தேர்தல் பணியாற்றியது தொடர்பாக அங்கிருந்த கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்.

பாஜக தென் சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் முத்துமாணிக்கம்
பாஜக தென் சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் முத்துமாணிக்கம்

அப்போது அங்கு வந்த பாஜகவை சேர்ந்த டிக்காராம், வெங்கட், மாரியம்மாள் மற்றும் மேலும் ஐந்து பேர், “பூத் ஏஜென்ட் வேலை செய்ததற்கான பணம் ஏன் கொடுக்கவில்லை?” எனக் கூறி முத்துமாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக தென் சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் முத்துமாணிக்கம்
“இன்று நான் பாதுகாப்பாக இருக்க பாஜக தலைவர்கள்தான் காரணம்” - மணீஷ் காஷ்யப் பரபரப்பு பேட்டி!

பின்னர் முத்துமாணிக்கத்தை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதையடுத்து இதுதொடர்பாக முத்துமாணிக்கம், துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பிரதமர் மோடி உடன் முத்துமாணிக்கம்
பிரதமர் மோடி உடன் முத்துமாணிக்கம்

அதன் பேரில் ஐந்து பிரிவுகளின் கீழ் பாஜகவினர் 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக சந்தேகத்தின்பேரில் பேரில் வாசு, ஜெயக்குமார் என்பவர்கள் உட்பட 4 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com