”ஏமாற்றிவிட்டார்கள்” - மஞ்ஞும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு

மஞ்ஞும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் மீது கேரளா காவல் துறையினர் பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மஞ்ஞும்மல் பாய்ஸ்
மஞ்ஞும்மல் பாய்ஸ்புதிய தலைமுறை

மஞ்ஞும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் மீது கேரளா காவல் துறையினர் பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி வெளியான திரைப்படம் மஞ்ஞும்மல் பாய்ஸ். இப்படம் கேரளம் மற்றும் தமிழகத்தில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதற்கிடையே மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், பாபு ஷாஹிர், ஷான் ஆண்டனி ஆகியோர் மீது சிராஜ் என்பவர் பண மோசடி புகார் அளித்திருந்தார்.

மஞ்ஞும்மல் பாய்ஸ்
‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடித்த ‘டாடா’ ஹீரோயின் அபர்ணா தாஸ்!

அதில் தயாரிப்பாளர்கள் படத்தின் லாபத்தில் பங்கு தருவதாகக் கூறி 7 கோடி ரூபாய் தன்னிடம் இருந்து பெற்றதாகவும், இதுவரை பணத்தைத் திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து எர்ணாகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற உத்தரவின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com