கோவை | வாக்குரிமை மறுக்கப்பட்டதாக போராடியோர் கைகளில் வாக்களித்த மை.. ட்ரோலில் சிக்கியோர் சொல்வதென்ன?

“நாங்கள் வாக்கு செலுத்தி இருந்தாலும் வாக்களிக்க முடியாமல் போனவர்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டோம்” என ‘Public for Annamalai’ அமைப்பினர் கூறினர்.
கையில் வாக்களித்த மை.. வாக்குரிமை மறுக்கப்பட்டதாக போராட்டம்
கையில் வாக்களித்த மை.. வாக்குரிமை மறுக்கப்பட்டதாக போராட்டம்புதிய தலைமுறை

செய்தியாளர் : பிரவீண்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளிலும், ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில் கோவை மக்களவை தொகுதியின் வேட்பாளரும், தமிழ்நாடு பாஜக தலைவருமான அண்ணாமலை கரூர் மாவட்டம் ஊத்துப்பட்டி உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

கரூர் அருகே தொட்டம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
கரூர் அருகே தொட்டம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோவை தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை” என குற்றம்சாட்டியிருந்தார்.

குறிப்பாக அவர் பேசுகையில், “தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மிக மோசமாக நடந்துள்ளது. இதில் அரசியல் தலையீடு இருக்குமோ என்கிற சந்தேகமும் எங்களுக்கு வருகிறது. ஏனெனில் பாரம்பரியமாக பாஜகவிற்கு வாக்களிப்பவர்களது வாக்குரிமை திட்டமிட்டு மறுக்கப்பட்டுள்ளது. எங்களது கணக்கின்படி ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அளவிலானது” என தெரிவித்திருந்தார்.

கையில் வாக்களித்த மை.. வாக்குரிமை மறுக்கப்பட்டதாக போராட்டம்
“ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை” - அண்ணாமலை குற்றச்சாட்டு

இந்நிலையில், அண்ணாமலைக்கு ஆதராவாக ‘Public for Annamalai’ என பெயர் கொண்ட அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள சிலர், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு “எங்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதற்கு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” எனக்கோரி இன்று போராட்டம் நடத்தினர்.

Public for Annamalai சார்பில் நடந்த போராட்டம்
Public for Annamalai சார்பில் நடந்த போராட்டம்

அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பொதுமக்களாக உருவாக்கிய இயக்கம்தான் இந்த Public for Annamalai” என்று கூறிய அந்த அமைப்பினர், கோவை மக்களவை தொகுதியில் லட்சக்கணக்கானோரின் வாக்குகள் நீக்கப்பட்டதாக கூறி முழக்கங்களை எழுப்பினர்.

பொதுமக்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு என சொன்னாலும் பா.ஜ.க ஸ்டைலில் "பாரத் மாதா கி ஜே" என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் துவங்கி, அதே முழக்கத்துடன் நிறைவும் அடைந்தது.

கையில் வாக்களித்த மை.. வாக்குரிமை மறுக்கப்பட்டதாக போராட்டம்
“கோவை தொகுதி வாக்காளர்களுக்கு பாஜக பணம் கொடுத்ததாக நிரூபித்தால்...” - அண்ணாமலை சவால்

மேலும் ஆர்ப்பாட்டத்தின் போது “பா.ஜ.க இதை (வாக்குரிமை மறுக்கப்பட்ட குற்றச்சாட்டை குறிப்பிட்டு) பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. எங்களுடைய இந்த அமைப்பு, பொது மக்களாக உருவாக்கிய அமைப்பு. இதற்கும் பா.ஜ.க-விற்கும் தொடர்பில்லை” என தெரிவித்தனர் அந்த அமைப்பினர்.

இப்போராட்டத்தில் பங்கேற்ற பலரும் மக்களவை தேர்தலில் ஓட்டு போட்டிருந்ததுதான், போராட்டத்தின் ஹைலைட்டாக அமைந்தது. அவர்கள் வாக்களித்ததற்கான அடையாளம், அவர்களின் ஆள்காட்டி விரலில் மையாக இருந்தது. இது இணையவாசிகளால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. “வாக்குரிமை கிடைத்தவர்கள் கூட வந்து ‘எனக்கு வாக்கு இல்லை, ஏன்’ என பதாகை ஏந்தி வந்து கேட்கிறார்களே” என ட்ரோல் செய்துவந்தனர்.

இந்நிலையில் இணைய ட்ரோல்களுக்கு பதில் அளிக்கும் வகையில், “நாங்கள் வாக்கு செலுத்தி இருந்தாலும், வாக்களிக்க முடியாமல் போனவர்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டோம். பயம் இருப்பவர்கள்தான் முழுவதுமாக மறு தேர்தல் கேட்பாளர்கள். எங்களுக்கு அதுபோன்ற கோரிக்கை ஏதும் இல்லை. எங்கள் தலைவர் நிச்சயம் வெற்றியை சந்திப்பார். தோல்வி பயமே எங்களுக்கு கிடையாது.

எங்களை பொறுத்தவரை தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும். அதற்காக போராடுகிறோம். வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களுக்குதான் ஓட்டு போட வாய்ப்பு வழங்க வேண்டும்” எனக் கூறினர்.

கையில் வாக்களித்த மை.. வாக்குரிமை மறுக்கப்பட்டதாக போராட்டம்
ராஜஸ்தான் | “I-N-D-I-A கூட்டணியிடம் பாஜக தோல்வியை தழுவும்” - பாஜக அமைச்சரின் பேச்சு வைரல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com