[X] Close

கர்நாடகாவில் கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை?

கொரோனா வைரஸ்

Karnataka-state-in-India-Facing-shortage-of-COVID19-Vaccines

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று தனது கோரமான இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில், கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக அந்த மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டுமே தேவையான மருந்துகள் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

பெங்களூருவில் உள்ள மருத்துவமனைகள் குறைந்த அளவிலான தடுப்பு மருந்துகளை மட்டுமே பெற்றுள்ளதாகவும், சில மருத்துவமனைகளில் அது கூட இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பெரும்பாலான மூத்த குடிமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் வீடு திரும்பும் கையறு நிலை ஏற்பட்டுள்ளது. 

image


Advertisement

கர்நாடக மாநிலத்திற்கு சுமார் 12 லட்சம் மருந்துகள் வர வேண்டியுள்ளது. அடுத்த சில நாட்களுக்குள் அந்த மருந்துகள் கிடைத்தால் இந்த பற்றாக்குறையை அந்த மாநிலம் ஓரளவுக்கு சமாளிக்கும் எனத் தெரிகிறது. 

“இந்த வாரத்திற்குள் 12 லட்சம் மருந்துகள் வர உள்ளன. இதுவரை மாநிலத்திற்கு  31 லட்சம் தடுப்பு மருந்துகள் வந்துள்ளன. அதில் 3.9 லட்சம் மருந்துகள் கோவாக்ஸின் ஆகும். நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேருக்கும் தடுப்பு மருந்து செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என சுகாதார ஆணையர் திரிலோக் சந்திரா தெரிவித்துள்ளார். 

மாநில தனியார் மருத்துவமனைகள் சங்கத்தின் தலைவரும், மருத்துவருமான பிரசன்னா சில இடங்களில் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போது மருந்து விநியோகிக்கப்படும் வேகத்தில் மருந்துகள் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வந்தால் தொற்று பாதிக்கும் அபாயம் உள்ளவர்கள் அனைவருக்கும் முழுமையாக செலுத்த ஓராண்டு காலம் பிடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


Advertisement

image

இருப்பினும் இப்போதைக்கு பற்றாக்குறை எங்கும் இல்லை எனவும், தடுப்பு மருந்துகளை மீண்டும் விநியோகிக்க வேண்டிய நிர்பந்தம் எழுந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில வட்டாரங்களில் மருந்துகள் அதிகம் இருப்பு உள்ளன. ஆனால் அந்த இடங்களில் தடுப்பு மருந்தை செலுத்திக் கொள்ள பெரும்பாலானவர்கள் முன்வராத காரணத்தினால் அதனை அங்கிருந்து திரும்ப பெற்றுக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தகவல் உறுதுணை: The Logical Indian 


Advertisement

Advertisement
[X] Close