பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் மௌனம் கலைத்த பிரதமர் மோடி!

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார்.
பிரதமர் மோடி - பிரஜ்வல் ரேவண்ணா
பிரதமர் மோடி - பிரஜ்வல் ரேவண்ணாமுகநூல்

பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை ரேவண்ணா மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார், தேசிய அளவிலான அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணாட்விட்டர்

பிரஜ்வல் ஜெர்மனிக்கு சென்ற நிலையில், அவரது தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. கூட்டணி கட்சியினர் மீதான குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

பிரதமர் மோடி - பிரஜ்வல் ரேவண்ணா
ஜார்க்கண்ட் | அமைச்சர் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்த அமலாக்கத்துறை!

இந்நிலையில், ஆங்கில தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்த பிரதமர் மோடி, இந்த விவகாரம் தொடர்பாக முதன்முறையாக பேசியுள்ளார். அதில், “பிரஜ்வலை இந்தியா அழைத்துவந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com