குமரி: திருமணத்திற்கு வந்த இடத்தில் கடலில் குளிக்கச் சென்ற 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான லெமூர் கடற்கரைக்கு வந்த திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் 5 பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி - கடலில் குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் மரணம்
கன்னியாகுமரி - கடலில் குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் மரணம்pt desk

செய்தியாளர்: நவ்பல் அஹமது

குமரி மாவட்டம் கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார் (24). இவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரது உறவினர் திருமணம் நேற்று கன்னியாகுமரியில் நடைபெற்றுள்ளது.

இதற்காக முத்துக்குமாருடன் பயின்று வரும் 12 மாணவ மாணவிகள், நேற்று முன்தினம் குமரிக்கு சென்றுள்ளனர். நேற்று திருமணம் முடித்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு அவர்கள் சென்று வந்துள்ளனர்.

கன்னியாகுமரி - கடலில் குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் மரணம்
கன்னியாகுமரி - கடலில் குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் மரணம்pt desk

இந்நிலையில், இன்று காலை லெமூர் கடற்கரைக்குச் சென்ற அவர்கள், கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, வந்த ராட்சத அலை அவர்களை இழுத்துச் சென்றுள்ளது. இதில், 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில், 3 பேர் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர். இதையடுத்து உடனடியாக அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் கடலில் மிதந்த மூன்று பேரின் உடல்களை மீனவர்கள் தங்கள் படகில் சென்று மீட்டுள்ளனர்.

கன்னியாகுமரி - கடலில் குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் மரணம்
கன்னியாகுமரி | கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமி மீட்கப்படுவாரா? காத்திருக்கும் உறவினர்கள்!

இந்த சம்பவத்தில் உயிரிழந்த பிரவின் சாம், காயத்திரி, சாரு கவி, வெங்கடேஷ் மற்றும் தர்சித் ஆகிய 5 பேரின் உடலும் தற்போது கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஜகமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி - கடலில் குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் மரணம்
கன்னியாகுமரி - கடலில் குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் மரணம்pt desk

குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் என்பதால் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஶ்ரீதர் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி - கடலில் குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் மரணம்
ஆரஞ்ச் அலர்ட்: மயிலாடுதுறை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com