காலை தலைப்புச் செய்திகள் | தொடங்கிய 3ம் கட்ட தேர்தல் முதல் இந்திய ஜெர்சி மீது எழும் விமர்சனங்கள் வரை

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது மூன்றாம் கட்ட தேர்தல் முதல் விண்ணில் பறக்கும் சுனிதா வில்லியம்ஸ் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
தலைப்புச் செய்திகள்
தலைப்புச் செய்திகள்புதிய தலைமுறை
  • 3-ஆம் கட்ட மக்களவை தேர்தல் இன்று தொடங்கி உள்ளது. 94 தொகுதிகளில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த மக்கள் ஜனநாயக கடமையாற்றுகிறார்கள்.

  • குஜராத் அகமதாபாத்தில் பிரதமர் மோடி, காந்திநகர் தொகுதியில் அமித்ஷாவும் தங்களது ஜனநாயக கடமையை இன்று ஆற்றுகின்றனர்.

  • பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மறுகூட்டலுக்கு இன்றுமுதல் விண்ணபிக்கலாம் என்று அரசுத் தேர்வு இயக்ககம் அறிவிப்பு.

  • உதகை, கொடைக்கானலுக்கு இ- பாஸ் பெற்றவர்கள் மட்டுமே இன்றுமுதல் அனுமதி.

  • தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்காததால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

                  எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
  • தமிழகம் முழுவதும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா விளக்கம்.

  • நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், உடற்கூராய்வு அறிக்கை காவல்துறையிடம் ஒப்படைப்பு.

  • சென்னையில் சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது. மேலும், உரிமம் இல்லாமல் வளர்க்கப்பட்ட நாய்களை ஒருவாரத்தில் அப்புறப்படுத்த மாநகராட்சி உத்தரவு.

  • தூத்துக்குடி முத்தையாபுரத்தில் ஆண் நண்பருடன் சென்ற தன் மனைவி 6 மாதத்திற்கு பிறகு வந்ததால் ஆத்திரமடைந்த கணவர மனைவியை வெட்டிக்கொலை. இந்நிலையில், காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

  • மினி லாரியில் ரகசிய அறை அமைத்து பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வந்தவர் விருத்தாசலத்தில் கைது செய்யப்பட்டார்.

  • மதுரையில் இதய சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழந்ததற்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு.

  • சிவகாசி அருகே பட்டாசு மூலப்பொருள் தயாரிக்கும் ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டதில், 5 பேர் படுகாயம்.

    `

  • திருவண்ணாமலை ஆசிரமத்தில் ரமண மகரிஷியின் 74வது ஆராதனை விழாவில், மனமுருகி பாடல்களை பாடினார் இசையமைப்பாளர் இளையராஜா.

  • திருச்சி முசிறியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள், நெற்பயிர்கள் சேதம்.

  • வேலூர், சேலம் மாவட்டங்களை குளிர்வித்த கோடைமழையால் வெப்பம் தணிந்து மக்கள் நிம்மதி.

  • பெங்களூரு நகரில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது வெள்ளம்.

  • பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும என ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பிரதமர் மோடி உறுதி.

  • ராகுல் காந்தியை விமர்சித்து வீடியோ வெளியிட்டதாக காங்கிரஸ் புகாரளித்த விவகாரத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் மீது பெங்களூருவில் வழக்குப்பதிவு.

ராகுல் காந்தி
ராகுல் காந்திமுகநூல்
  • ஜார்க்கண்டின் அமைச்சர் தனிச்செயலாளரின் உதவியாளர் வீட்டில் 30 கோடி ரூபாய் பறிமுதல். கட்டுக்கட்டாக கைப்பற்றிய பணத்தை 12 மணிநேரமாக எண்ணிய அமலாக்கத்துறை.

  • டெல்லியை கார் ஷோரூமில் 12 ரவுண்ட் துப்பாக்கியால் சுட்ட இருவருக்கு வலைவீச்சு.

  • தற்காலிக போர் நிறுத்தத்திற்கு முன்வந்த ஹமாஸ், ராணுவ நடவடிக்கை தொடரும் என இஸ்ரேல் திட்டவட்டம்.

  • நீதிமன்ற தடை உத்தரவை மீறியதால் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ஆயிரம் டாலர் அபராதம். மேலும், மீண்டும் மீறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என நியூயார்க் நீதிமன்றம் எச்சரிக்கை.

  • ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியை எளிதில் வீழ்த்தியது மும்பை. அதிரடியாக சதமடித்து வெற்றிக்கு வித்திட்டார் சூர்யகுமார்.

  • பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணியை சமாளிக்குமா டெல்லி?. அருண்ஜெட்லி மைதானத்தில் இன்றிரவு பலப்பரீட்சை.

  • டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் ஜெர்சி அறிமுகம் செய்யப்படிருக்கிறது என காவி நிறத்தில் இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம்.

  • சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்லுமா இந்திய கிரிக்கெட் அணி?.. மத்திய அரசின் முடிவுப்படியே செயல்படுவோம் என பிசிசிஐ விளக்கம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com