Published : 16,Mar 2021 11:35 AM

மதுவிலக்கை வலியுறுத்துவோம் : காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு

congress-party-released-election-statement

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

1. திமுக ஆட்சி அமைந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்.

2. புதிய தொழில்முனைவோருக்கு 5 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு

3. ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்புச் சட்டங்கள் கொண்டுவரப்படும்.

4. மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

5. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டை 10%ஆக உயர்த்த நடவடிக்கை

6. மத்திய அரசின் 3 வேளாண்சட்டங்களுக்குப் பதிலாக விவசாயிகளை காக்கும் சட்டங்கள் கொண்டுவரப்படும்.

7. 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 500 இளைஞர்கள், இளம்பெண்களுக்கு குடிமைப்பணி உள்ளிட்ட பணிகளுக்கு பயிற்சி

8. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்க நடவடிக்கை

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்