Published : 25,Jan 2017 04:48 PM
அனைத்து மாவட்டங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம்

நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகத்தினைத் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
குஜராத்தின் தாகோட் நகரிலுள்ள தபால்நிலையத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்தைத் திறந்துவைத்த வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் இந்த தகவலைத் தெரிவித்தார். ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் வெளியுறவுத் துறை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.