[X] Close

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ‘தலைவி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு

சினிமா

thalavi-Release-Date-Announcement-

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி , ’தலைவி’ படக்குழு படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இதே நாளில் மறைந்தார். மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்ற தலைவர்கள் என்றாலே இந்தியாவில், அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுக்க இயக்குநர்கள் படையெடுப்பார்கள். அப்படித்தான், இயக்குநர் கெளதம் மேனனும், ஏ.எல் விஜய்யும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வராலாற்றுப் படத்தை இயக்க ஆர்வம் காட்டினார்கள்.

image


Advertisement

கெளதம் மேனன் ரம்யா கிருஷ்ணனை வைத்து ‘குயின்’ என்ற வெப் சீரிஸை இயக்கினார். ஏ.எல் விஜய் கங்கனா ரனாவத்தை வைத்து ‘தலைவி’ படத்தை இயக்கி முடித்துள்ளார். குயின் வெப் சீரிஸுக்கு கிடைத்த வரவேற்பு போலவே, தலைவிக்கும் கிடைக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பையும் கலவையான விமர்சனங்களையும் பெற்ற நிலையில், இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தியேட்டர்களில் தலைவி படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

 ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close