சென்னை: வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்!

பெரும்பாக்கத்தில் வீட்டில் விளையாடியக் கொண்டிருந்த 8 வயது சிறுமி, ஜன்னல் கயிற்றில் துணி சிக்கி கழுத்து இறுகியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
Death
Deathpt desk

செய்தியாளர்: சாந்தகுமார்

சென்னை பெரும்பாக்கம் எழில்நகர், 128 பிளாக்கை சேர்ந்தவர்கள் உதயா – சரண்யா தம்பதியர். கூலி வேலை செய்து வரும் இவர்கள் இருவரும், வேலைக்குச் சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளனர்.

அஸ்வந்தி
அஸ்வந்தி

அப்போது அவர்களின் 8 வயது மகள் அஸ்வந்தி, ஜன்னல் கயிற்றில் மாட்டியிருந்த ஒரு துணி கழுத்தில் சுற்றப்பட்டு, கழுத்து இறுக்கிய நிலையில் மயங்கி இருந்துள்ளார். இதையடுத்து சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Death
நாகர்கோவில்: தந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகன் - நண்பர்கள் உட்பட 3 பேர் கைது

தகவலறிந்து அங்கு சென்ற பெரும்பாக்கம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com