இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-ஆவது டெஸ்ட் போட்டி இன்று பிங்க் பந்தில் பகலிரவு போட்டியாக தொடங்குகிறது.
அகமதாபாத்தில் உள்ள பிரம்மாண்ட சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில், இந்தியப் நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு பகலிரவு ஆட்டமாக போட்டி தொடங்குகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இங்கிலாந்து கடைசி இரு டெஸ்ட் போட்டிகளுக்காக ஆடும் லெவனில் சில முக்கிய மாற்றங்களைச் செய்யவுள்ளதாக தெரிகிறது.
பேர்ஸ்ட்டோவ், ஸேக் கிராவ்லி, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்திய அணியில் ஷாபாஷ் நதீமிற்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியாளர் யார் என்பதை தீர்மானிக்கவுள்ள போட்டிகள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் உள்ளது. மேலும் கடைசி இரு டெஸ்ட் போட்டிகளும் முற்றிலும் புதிய அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளதால், இரு அணிகளுக்கும் சவால்கள் நிறைந்திருக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
அகமதாபாத் கிரிக்கெட் மைதானம் புனரமைக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடைமுறை காரணமாக 55000 ரசிகர்கள் இப்போட்டியை காண அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த 5 டெஸ்ட் போட்டிகளில் அகமதாபாதில் அணி.யின் சராசரி ஸ்கோர் 382 என வரலாறு சொல்கிறது.
உத்தேச இந்திய அணி:
ரோகித் சர்மா
சுப்மன் கில்
புஜாரா
விராட் கோலி
ரஹானே
ரிஷப் பன்ட்
ரவிசந்திரன் அஸ்வின்
அக்சர் படேல்
இஷாந்த் சர்மா
பும்ரா
முகமது சிராஜ்
இங்கிலாந்து உத்தேச அணி
ஜாக் கிராவ்லி
டாமினிக் சிப்லே
ஜானி பேரிஸ்டோ
ஜோ ரூட்
பென் ஸ்டோக்ஸ்
பென் ஃபோக்ஸ்
ஒல்லி போப்
டாம் பெஸ்
ஜோப்ரா ஆர்ச்சர்
ஜாக் லீச்
ஜேம்ஸ் ஆண்டர்சன்
Loading More post
ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் போட்டோவை கிழித்து செருப்பால் அடித்த ஆதரவாளர்கள்!
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவிகளிடம் பேசி சமாதானப்படுத்த உத்தவ் மனைவி முயற்சி!
‘அம்மாவின் இதயத்தில் இருந்து... என் எதிர்காலத்தை...’ - ஓ.பி.எஸ். உருக்கமான பேச்சு
வலுவான மும்பையை வீழ்த்தி மாஸ் காட்டிய ம.பி அணி.. முதல்முறையாக வசமானது ரஞ்சிக் கோப்பை!
அட்லியுடனான கெமிஸ்ட்ரி.. ஜவான் சீக்ரெட்களை உடைத்த ஷாருக் கான்!
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'