Published : 19,Jul 2017 08:30 AM
மரங்களை வெட்டினால் மட்டுமே மதிப்பெண்: மாணவர்களை மிரட்டும் தனியார் ஐடிஐ

செய்முறை தேர்வில் மதிப்பெண் பெற வேண்டும் என்றால் வளாகத்தில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என தனியார் ஐடிஐ கல்வி நிறுவனம் ஒன்று மாணவர்களை மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடலூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் , காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றிற்கு அருகில் மஞ்சக்குப்பம் என்ற இடத்தில் தனியார் ஐடிஐ தொழிற் கல்வி பயிற்சி மையம் அமைந்துள்ளது. அங்கு பயிலும் மாணவர்களை மிரட்டி 25க்கும் மேற்பட்ட மரங்களை ஐடிஐ நிர்வாகம் வெட்டச் செய்துள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஐடிஐ நிர்வாகத்திடம் கேட்டதற்கு, உரிய பதில் அளிக்கவில்லை. படிக்க வரும் மாணவர்களை இதுபோன்ற ஆபத்தான பணிகளை செய்யச் சொல்வது குறித்து கால்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.