[X] Close

சசிகலா வருகை தாக்கத்தை ஏற்படுத்துமா? - வானதி சீனிவாசன் பேட்டி

தமிழ்நாடு,தேர்தல் களம்

Depending-on-the-impact-of-Sasikala-s-visit--Vanathi-Srinivasan

சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழகத்தை பொருத்தமட்டில் கூட்டணிக்கு அ.தி.மு.க.வே தலைமை வகிக்கிறது என பா.ஜ.க. அகில இந்திய மகிளா மோர்ச்சா தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் டெல்லியில் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தார்.


Advertisement

பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய மகிளா மோர்ச்சா தலைவர் வானதி சீனிவாசன் டெல்லியில் "புதிய தலைமுறைக்கு" பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சசிகலா வருகை அரசியலில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது முழுக்க முழுக்க அந்தக் கட்சி சார்ந்தது. அவர்களை கட்சி ஏற்றுக்கொள்கிறதா? என்பது தொடர்பாக ஏற்கெனவே அமைச்சர்கள் பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முடிவு செய்ய வேண்டிய விஷயம். இதில் பா.ஜ.க.வுக்கு எந்தவித பங்கும் இல்லை.

image


Advertisement

தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் இருந்து தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பயணிக்கிறது. தமிழகத்தைப் பொருத்தமட்டில் கூட்டணிக்கு அ.தி.மு.க. தலைமை வகிக்கிறது. சசிகலாவின் காரில் அ.தி.மு.க.கொடி பயன்படுத்தியது தொடர்பாக அதிமுக தான் முடிவெடுக்க வேண்டும். நாங்கள் இவற்றை கவனித்துக் கொண்டிருக்கிறோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைப் பொருத்தமட்டில் அந்தக் கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் இருக்கிறார். அதிமுக., திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் போன்றுதான் தற்போது பாஜகவும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசியல் களம் தற்போது பரபரப்பாக இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close