
பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில், மழையில் நனைந்தபடி விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர். பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைளை முன்வைத்து தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று பிரதமர் வீட்டை முற்றுகையிட முயற்சித்த நிலையில் இரண்டாவது நாளான இன்று, மண்டை ஓடுகளை வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.