பத்மபூஷன் விஜயகாந்த்!

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், வைஜெயந்திமாலா உட்பட தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கினார்.
விஜயகாந்த்
விஜயகாந்த்புதிய தலைமுறை

நடப்பாண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள குடியரசத் தலைவர் மாளிகையில் 2 ஆம் கட்டமாக நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

கலைத்துறையில் சிறப்பாக செயல்பட்டதாக மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் பத்ம பூஷன் விருதை பெற்றுக் கொண்டார்.

அதேபோல், தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை வைஜெயந்திமாலாவுக்கு பத்ம விபூஷன் வழங்கி சிறப்பித்தார் குடியரசுத் தலைவர்.

விஜயகாந்த்
சிவகாசி | பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - 8 பேர் தீயில் கருகி உயிரிழப்பு; 7 அறைகள் தரைமட்டம்!

மேலும், ஸ்குவாஸ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, வள்ளி ஒயில் கும்மி நடனக்கலைஞர் பத்ரப்பன், மருத்துவத்துறையில் சிறப்பான சேவையாற்றிய ஜி நாச்சியார் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பல்துறையை சேர்ந்தவர்களுக்கும் பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார். இந்த நிகழ்வில் பிரதமர், மத்திய அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com