[X] Close

டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?

இந்தியா,விவசாயம்

தடையை மீறி டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அங்கு ஏற்றிய கொடி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதிகளின் கொடி என ஒருதரப்பினர் தொடர்ந்து பரப்பி வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து காண்போம்.


Advertisement

டெல்லியில் உள்ள செங்கோட்டையில் அனுமதியின்றி நுழைந்த விவசாயிகள் அங்கு தங்கள் கொடியை நிலைநாட்டினர். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள சிலர், செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை பறக்கவிட்டு இருப்பதாக விமர்சித்தனர். மேலும் சிலரோ கம்பத்தில் பறந்த தேசிய கொடியை இறக்கிவிட்டு, காலிஸ்தான் கொடியை பறக்கவிட்டதாக கூறினர்.

இந்த கொடியின் உண்மைத் தன்மை குறித்து நமது உண்மை கண்டறியும் குழு ஆராய்ந்தது. செங்கோட்டையில் விவசாயிகள் நிறுவியது காலிஸ்தான் கொடியல்ல, மாறாக சீக்கிய மத சின்னம் பொறிக்கப்பட்ட கொடி என்பது தெரியவந்தது. காவி நிறத்தில் முக்கோண வடிவம் கொண்ட கொடியில் கத்தி சின்னத்துடன் சீக்கிய மொழியில் "KHANDA" ‌‌‌‌‌என எழுதப்பட்டிருந்தது. கந்தா என்பதற்கு இரு முனைகளை கொண்ட வாள் என்பது பொருள். சக்கரத்துக்கு நடுவில் இரு முனைக்கொண்ட வாளும், இருபுறங்களில் இரண்டு வாள்களுடன் கூடிய சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, பஞ்சாப்பில் வழிபாட்டுத் தளமான குருத்வாராக்களில் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, சுல்தான்பூர் லோதி பகுதியில் உள்ள குருத்வாராவில் அதே சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை தலையில் அணிந்திருந்தார்.


Advertisement

1970களில் சீக்கியர்களின் ஒரு பகுதியினர் தனி காலிஸ்தான் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது கொடியும் இதே சின்னம், இதே நிறத்தில் இருக்கும். ஆனால், காலிஸ்தான் என அதில் பொறிக்கப்பட்டு இருக்கும்.

image

செங்கோட்டையில் ஏற்றப்பட்ட மஞ்சள் பச்சை கலந்த மற்றொரு கொடி விவசாய அமைப்பின் கொடி என்பது தெரியவந்தது. டெல்லியில் ஏராளமான விவசாய அமைப்புகள் அவரவரது கொடிகளுடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


Advertisement

இதேபோல், செங்கோட்டையில் தேசிய கொடியை இறக்கிவிட்டு விவசாயிகள் தங்கள் கொடியை விவசாயிகள் நிலைநாட்டினர் என உலா வரும் தகவலிலும் எந்தவித உண்மையும் இல்லை. வெறும் கம்பத்திலேயே விவசாயிகள் தங்கள் கொடியை நிறுவியது, காட்சிகளின் மூலமே புலப்படும். தேசிய கொடி செங்கோட்டையின் மையத்தில் உள்ள கம்பத்தில் மட்டுமே பறந்துக் கொண்டிருந்தது. அந்த கொடியை விவசாயிகள் தொடவும் இல்லை. அதன் அருகில் செல்லவும் இல்லை.


Advertisement

Advertisement
[X] Close