[X] Close

2018 தேர்தல்தான் என்னுடைய கடைசி தேர்தல்: சித்தராமையா

2018-Assembly-Polls-Most-Likely-My-Last-Election--Karnataka-Chief-Minister-Siddaramaiah

2018-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் அநேகமாக என் கடைசி தேர்தலாக இருக்கும் என கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.

மைசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனக்கு அரசியலில் மறுபிறவி கொடுத்த தொகுதி சாமுண்டீஸ்வரி தொகுதி தான். இந்த தொகுதியில் 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். எனவே தான் இங்குள்ள மக்கள் இதே தொகுதியில் மீண்டும் நான் நிற்க வேண்டும் என நினைக்கிறார்கள். வரும் 2018-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலே அநேகமாக என் கடைசி தேர்தலாக கூட இருக்கலாம். அந்த தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் நிற்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை" என்றார்.

68 வயதாகும் சித்தராமையா கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலின் போதும் கூட, இதுவே என் கடைசித் தேர்தல் என கூறியது நினைவுகூறத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close