Published : 20,Jan 2021 10:41 AM

பஞ்சாயத்து தேர்தலில் கணவர் வெற்றி... தோளில் தூக்கி வைத்து கொண்டாடிய மனைவி

Unique-celebration-of-husband-victory-in-panchayat-elections

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 15-ம் தேதி 34 மாவட்டங்களை உள்ளடக்கிய 14,234 பஞ்சாயத்துகளில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இரண்டு லட்சத்து 14 ஆயிரத்து 880 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மகாராஷ்டிரா மாநில பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வரும் நிலையில், பாலு என்கிற பஞ்சாயத்தில் சந்தோஷ் சங்கர் குரா என்பவர் வெற்றி பெற்றார். இதையடுத்து தன்னுடைய கணவர் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் சந்தோஷ் சங்கர் குராவை அவரது மனைவி ரேணுகா, தனது தோளில் தூக்கி வைத்து சாலையில் வெற்றிக் களிப்புடன் நடந்து வந்தார். தற்போது இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.