பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி பரோலில் வந்த நபர், 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக கைது செய்யப்படுள்ளார்.
மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டம் பென் பகுதியில் 3 வயதான சிறுமி தனது பெற்றோருடன் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த குடிசையில் கதவுகள் இல்லை எனக் கூறப்படுகிறது. அப்போது நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் குடிசைக்குள் புகுந்து சிறுமியை வெளியில் மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அப்போது சிறுமி வலியால் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து இறந்த சிறுமியின் உடலை மீண்டும் குடிசைக்குள் போட்டுவிட்டு செல்ல வந்தபோது, சிறுமியின் பாட்டி இதைக் கண்டதும் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். உடனே சிறுமியின் உடலை வீசியெறிந்துவிட்டு மர்ம நபர் தப்பிச் சென்றார். இதுகுறித்து ராய்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுமியின் உறவினர்கள், உள்ளூர் தலைவர்கள் உள்ளிட்டோர் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், ஆதேஷ் பாட்டீல் என்ற 35 வயதான நபர்தான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததை கண்டறிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றஞ்சாட்டபட்ட ஆதேஷ் பாட்டீல் மீது ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கு, வீட்டை உடைத்தல், திருட்டு, தாக்குதல் போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த பத்து நாட்களுக்கு முன்புதான் ஆதேஷ் பாட்டீல் பரோலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ராய்காட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலரான வைஷாலி பாட்டீல் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சரிடம் பேசினார். குற்றவாளிக்கு எதிரான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்றும், நிர்பயா வழக்கில் வழங்கப்பட்டதைப் போலவே குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்றும் கோரினார்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி பரோலில் வந்த நபர், 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்