ஆனது 80 வருடம்! பிப்ரவரி -செப்டம்பருக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும் ’பைனரி’ நட்சத்திரம்!

பைனரி நட்சத்திரமானது 80 வருடங்களுக்கு ஒருமுறை வெடிக்கும். அதன் படி1946 க்கு பிறகாக, இந்த வருடம் பிப்ரவரியிலிருந்து செப்டம்பர் மாதத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கலாம்
வெடிக்கும் நட்சத்திரம்
வெடிக்கும் நட்சத்திரம்நாசா

விண்வெளியில் பல அரிய நிகழ்வுகள் அவ்வபோது நடந்துக்கொண்டேதான் இருக்கின்றன. அதை விஞ்ஞானிகளும் கண்டுபிடித்து நமக்கு தெரியப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில், விண்வெளியில் வெடிக்கதயாராக உள்ள பைனரி நட்சத்திரத்தை பற்றி சமீபத்தில் நாசா கூறியுள்ளது. இந்த பைனரி நட்சத்திரமானது 80 வருடங்களுக்கு ஒருமுறை வெடித்து வருகிறதாம். அதன் படி1946 க்கு பிறகாக, இந்தவருடம் பிப்ரவரியிலிருந்து செப்டம்பர் மாதத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் பைனரி நட்சத்திரம் வெடிக்கலாம் என்றும், இந்த வெடிப்பை நாம் பூமியிலிருந்தே பார்க்கலாம் என்கிறார் அறிவியல் விஞ்ஞானியான Dr.விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி, Postdoctoral researcher, Trottier Space Institute at McGill, Montreal Canada .

 Dr.விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி,
Dr.விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி, PT

இது குறித்து அவர் நம்மிடம் பேசும்பொழுது, “இந்த Nova explosion 80 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். இதை நாம் பூமியிலிருந்தே பார்க்கமுடியும். அதாவது பூமியிலிருந்து 3000 ஒளி ஆண்டு தொலைவில் இரண்டு நட்சத்திரங்கள் அருகில் அருகில் இருக்கிறது. அதற்கு பெயர் red giant star மற்றும் white dwarf star. இதில் red giant star நமது சூரியனைவிட பலமடங்கு பெரியது. ஆனால் அதன் அருகில் இருக்கும் white dwarf star அளவில் மிக சிறியது அதனால் இது பூமியிலிருந்து நம் கண்களுக்கு தெரியாது.

நட்சத்திரம் வெடித்தால் எப்படி இருக்கும்?

இதில் white dwarf star அருகில் இருக்கும் red giant star லிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மெட்டிரியலை இழுத்துக்கொள்ளும் அதாவது, red giant நட்சத்திரத்தில் உள்ள வாயுக்கள் அணுக்கள் போன்றவற்றை தன்னுள் சேகரித்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி ஒரு கட்டத்தில் வெடிக்கும். வெடித்ததும் மொத்த மெட்டிரியல்கள் அனைத்தையும் மீண்டும் red giant star தன்னுள் இழுத்துக்கொள்ளும் இந்த விளையாட்டானது வானத்தில் 80 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும். கடைசியாக இந்த white dwarf star 1946ல் வெடித்தது. மீண்டும் 2024 ல் பிப்ரவரியிலிருந்து செப்டம்பர் மாதத்திற்குள் எப்பொழுது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் .”

”இந்த வெடிப்பை நாம் பூமியிலிருந்தே பார்க்கலாம். இந்த வெடிப்பானது இரண்டு நாட்களுக்கு வானில் தெரியும்.

வட்டமிட்டுள்ளதுதான் பைனரி நட்சத்திரங்கள்
வட்டமிட்டுள்ளதுதான் பைனரி நட்சத்திரங்கள்நாசா

விண்வெளியில் இரண்டு நட்சத்திரங்கள் மிக அருகருகே இருப்பதை பைனரி சிஸ்டம் என்று சொல்வார்கள். இந்த பைனரி சிஸ்டமானது நமது சூரிய குடும்பத்தில் நமக்கு தெரிந்து மொத்தமாக 5 தான் இருக்கிறது. அதிலும் red giant star மற்றும் white dwarf star மிகவும் ஸ்பெஷல். ஏனெனில் 80 வருடங்களுக்கு ஒரு முறை மெட்டிரியலை சேகரித்து வெடிப்பது என்பது அதிசயமான ஒன்று. அதுவும் இந்த தலைமுறையினர் இதை காண்பது அதிசயத்திலும் அதிசயம்” என்கிறார்.

இதையும் படிக்கலாம் திடீர் கோளாறு! 3மணி நேரத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்ட விண்கலம்; சுனிதா வில்லியம்ஸ் பயணம் ஒத்திவைப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com