ஜப்பான் வீடு
ஜப்பான் வீடுPT

குறைந்தவிலையில் வீடு வாங்கவேண்டுமா? ஜப்பானுக்கு செல்லுங்கள்; 9 மில்லியன் வீடுகள் காலியாம்! அதெப்படி?

இந்தியாவில் மக்கள்தொகை அதிகரிப்பால், வாடகைக்கு வீடு கிடைப்பது கூட கடினமான நிலை... இதில் சொந்தவீடு என்பது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனிதான்.

ஜப்பானில் 14% வீடுகள் வசிப்பதற்கு ஆள் இல்லாமல் பூட்டிகிடப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றது. காரணம் என்னவாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.

இந்தியாவில் மக்கள்தொகை அதிகரிப்பால், வாடகைக்கு வீடு கிடைப்பது கூட கடினமான நிலை... இதில் சொந்தவீடு என்பது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனிதான். இந்நிலையில்

ஜப்பானில் மொத்த குடியிருப்பில் 14% விகிதம் காலியாக இருப்பதாக அங்கு எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் வீடுகள் காலியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இது நியூயார்க் நகரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்கிறார்கள். இப்படி யாருமே இல்லாமல் கைவிடப்பட்ட வீடுகளை “அகியா” என்று கூறுகின்றனர்.

ஜப்பான் வீடு
'தயவுசெஞ்சு வாங்க.. உங்களதான் நம்பியிருக்கோம்'- இந்தியாவுக்கு கோரிக்கை வைத்த மாலத்தீவு அமைச்சர்!

இந்த “அகியா” வீடுகள் ஜப்பானில் உள்ள கிராமப்புரங்களில் அதிகம் காணப்படும். ஆனால் தற்பொழுது நகர்புறங்களிலும் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர்.

ஏன் ஜப்பானில் வீடுகள் ஆள் இல்லாமல் கைவிடப்படுகிறது எனபதற்கும் ஒரு சர்வே எடுத்துள்ளார்கள். அதன்படி, ஜப்பானில் மக்கள்தொகை கணிசமாக குறைந்து வருகிறது என்றும், திருமணம் செய்துக்கொள்பவர்கள் குழந்தை பெறுதலை தள்ளிப்போடுவதும் மக்கள்தொகை குறைய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

தவிர, ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை கொண்டவர்கள் தங்கள் வீடுகளை வாடகைக்கு விட நினைத்தாலும், வாடகைதாரர்கள் யாரும் இல்லாததாலும் பாதி வீடுகள் பூட்டி இருக்கிறது என்றார்கள். வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் திரும்பி வராமல் அங்கேயே தங்கி விடுவதாலும் வீடுகளில் குடிவராதநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கு மேற்பட்ட வீடுகள் பூட்டியே கிடப்பதாகவும், இளைஞர்களை விட வயதானவர்கள் அதிகம் இருப்பதாகவும் அதில் சிலருக்கு வாரிசு ஏதும் இல்லாத நிலையில் அவர்கள் வசித்து வந்த வீடு அகியா நிலைக்கு தள்ளப்படுகிறது என்கிறார்கள்.

மேலும் வீட்டின் உரிமையாளர், வீடுகளை விற்க முற்பட்டாலும் அதை வாங்குவதற்கு ஆளில்லாததால் பாதிக்கு மேற்பட்ட வீடு ஜப்பானில் காலியாக இருப்பதாக சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே வீடு வாங்கவேண்டும் என நினைப்பவர்கள் இந்திய, ஜப்பான் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, அங்கு சென்று வீடு வாங்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com