100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் கொடுமை, மிரட்டல்; சிறையிலேயே உயிரிழந்த ஜிலேபி பாபா! யார் இவர்?

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த ஜிலேபி பாபா ஹிசார் சிறையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
ஜிலேபி பாபா
ஜிலேபி பாபாpt web

அமர்வீர் (எ) அமர்புரி (எ) பில்லு (எ) ஜிலேபி பாபா ஹரியானாவில் சாமியார் எனக்கூறிக்கொண்டு பல குற்றச்செயல்களை செய்தவர். முன்னதாக இவர் ஜிலேபி விற்றுக்கொண்டு இருந்ததால் ஜிலேபி பாபா என அறியப்பட்டார். இதன்பின்னர் 2004-ல் ஹரியானாவின் டொஹானாவில் குடியேறிய இவர், அங்கு வீடும் கோயிலும் கட்டியிருக்கிறார். அங்கு வந்தவர்களிடம், குறிப்பாக அங்கு வந்த பெண்களிடம் அத்துமீறியுள்ளார். 2017 ஆம் ஆண்டு இவர் தனது இல்லத்தில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக ஒரு பெண் குற்றம் சாட்டியதை அடுத்து, அவர் மீது முதலில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது.

எனினும், 2018 ஆம் ஆண்டு ஜிலேபி பாபாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை அடுத்தே அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டபோது, அவரது ஆசிரமத்தில் இருந்து கடந்த 2018-ல் காவல்துறையினர் சுமார் 120 ஆபாச வீடியோக்களையும், பல குறுந்தகடுகளையும் பறிமுதல் செய்தனர். 2020 ஆம் ஆண்டு அவர்மேல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பெண்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட சுமார் 20 பேர் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர்.

ஜிலேபி பாபா
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காகவும், தன் குற்றச்செயலை வீடியோ எடுத்து வைத்து அப்பெண்களை மிரட்டியதற்காகவும் ஃபதேஹாபாத்திலுள்ள சிறப்பு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. கூடுதலாக அவருக்கு ரூ.35 ஆயிரம் அபராதமும் விதித்தது. கூடுதல் மாவட்ட நீதிபதி பல்வந்த் சிங், போக்சோ சட்டத்தின் பிரிவு 6-ன் கீழ் இந்த உத்தரவை வழங்கினார்.

18 வயதுக்குட்பட்ட குழந்தையை இருமுறை வன்கொடுமை செய்த குற்றத்துக்காக இந்த தண்டனை இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. இத்துடன், வேறு இரண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் இந்திய அரசியலைப்பு பிரிவு 376 சி-ன் கீழ் 7 வருட சிறை தண்டனையும்; பிரிவு 67 ஏ-ன் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது. சிறைதண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு, நீதிபதி முன்பு கண்ணீர்விட்டு அழுதார் என்றும் சொல்லப்பட்டது.

ஜிலேபி பாபா
அக்‌ஷய திருதியை | வரலாறு காணாத அளவில் தங்கம் விலை உயர்வு - எப்போது குறையும்?

அவரை கைது செய்த அப்பகுதி மகளிர் காவல் நிலைய இன்சார்ஜ் பிம்லா தேவி, “தன்னிடம் குறைகூற வந்த பெண்களுக்கு, ஏதோவொரு திரவத்தில் போதைப்பொருள்களை கலந்து கொடுத்திருக்கிறார் இவர். அதன்பின் அவர்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியிருக்கிறார். பின் அதை வீடியோ எடுத்து வைத்து, அப்பெண்களை அச்சுறுத்தி அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்” எனகூறியிருந்தார்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்குப் பிறகு அவர் ஹிசாரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இதன்பின்னர் அக்ரோஹாவில் உள்ள மகாராஜா அக்ரசென் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஜிலேபி பாபா
சிறுபான்மையினர் மக்கள் தொகை குறித்து திடீர் அறிக்கை; ஆய்வு குழுவில் ஆளுநர் ஆர்.என் ரவியின் மகள்!

இந்நிலையில், ஜிலேபி பாபா செவ்வாய்கிழமை இரவு சிறையிலேயே உயிரிழந்துள்ளார். அவரது வழக்கறிஞர் கஜேந்தர் பாண்டே கூறுகையில், “நீரிழிவு நோயாளியான அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்” என தெரிவித்தார். துணை காவல் ஆய்வாளர் பூப் சிங் இதுகுறித்து கூறுகையில், “செவ்வாய்கிழமை இரவு அவர் தனக்கு அசௌகரியமாக இருப்பதாக புகார் செய்ததை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இருப்பினும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் என கூறியுள்ளார். ஹிசாரில் உள்ள மருத்துவமனையில், அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com