‘வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை’ - நெடுநாள் போராட்டம்.. ரசிகர்கள் வெள்ளத்தில் திணறிய கவின்!

ஸ்டார் திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வரவேற்பைப் பெற்றுவரும் சூழில் ரசிகர்களின் அன்பில் நனைந்து வருகிறார் கவின்.
kavin
kavinpt web

‘ப்யார் ப்ரேமா காதல்’ இயக்குநர் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் உருவான திரைப்படம் ஸ்டார். பாடல்கள், ட்ரெய்லர் என ஒவ்வொன்றும் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

இயக்குநர் இளனின் முந்தைய திரைப்படமான ப்யார் ப்ரேமா காதல் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதேபோல் சமீபத்தில், நடிகர் கவின் நடித்த லிஃப்ட், டாடா உள்ளிட்ட திரைப்படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றன. அதோடு அவரது நடிப்பும் பேசப்பட்டது. சில தினங்கள் முன் இயக்குநர் நெல்சன் தயாரிப்பில், சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இத்தனை விஷயங்களுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது ஸ்டார் திரைப்படம். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். “யுவன் கவினுக்கும், ப்ரதீப் குமாருக்கும் நன்றாகத்தான் இசையமைக்கிறார். ஆனால் பெரிய படம் என்றால்...” சமீப காலமாக யுவன் குறித்து நெட்டிசன்கள் கூறும் வார்த்தைகள். ஸ்டார் திரைப்படம் பார்த்து வந்தவர்களோ யுவனின் இசையை தனித்து பேசுகின்றனர்.

புதிய தலைமுறையின் ஸ்டார் திரைப்படத்தின் விமர்சனத்தில், “இந்தப் படத்தை தனி ஆளாக உயிரூட்ட அசுரத்தனமாக உழைத்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன். படத்தின் பாடல்கள், பின்னணி இசை என அனைத்திலும் அத்தனை தரம். கடந்த சில ஆண்டுகளில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வந்த ஆல்பங்களில் தி பெஸ்ட் ஆல்பம் என ஸ்டாரை சொல்லலாம்” என குறிப்பிட்டுள்ளனர்.

KAVIN  STAR
KAVIN STAR STAR

இந்நிலையில், வெற்றி தியேட்டரில் ரசிகர்களுடன் ஸ்டார் திரைப்படத்தை பார்த்துள்ளார் கவின். அவரது நடிப்பு படத்தில் பெருமளவு கொண்டாடப்படுகிறது. அனைத்து ரசிகர்களும் அவரது நடிப்பை குறிப்பிட்டு பேசுகின்றனர். சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் படம் பார்த்துவிட்டு வெளியே அவர் வரும் வழியில் ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொள்ள பெரும் கூட்டத்தின் நடுவே நீந்தி வருகிறார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. நெடுநாள் காத்திருப்புக்குப் பின்னும், உழைப்பிற்குப் பின்னும் கவினுக்கு கிடைத்துள்ள, அவருக்கு உரிய ஒன்றாகத்தான் ரசிகர்களின் அன்பை பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com