டெல்லி | இடைக்கால ஜாமீனில் விடுதலையானார் கெஜ்ரிவால்.. ஆனால்.. இவ்வளவு நிபந்தனைகள் இருக்கா!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்காக ஜூன் 1 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்pt web
Published on

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும் அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிராகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனுவை டெல்லி கீழமை நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்

இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா , தீபங்கர் தத்தா அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையின் போது சரியாக தேர்தல் நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் என நீதிபதிகள் அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதன் பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பான விசாரணையில், அவருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நேர்மையற்ற அரசியல்வாதிகள் குற்றங்களை செய்ய வழிவகுக்கும். தேர்தல் காலம் என்ற போர்வையில் விசாரணையை தவிர்க்கும் சூழலையும் ஏற்படுத்தும் என கடுமையான வாதங்களை முன்வைத்தனர். தேர்தலில் பரப்புரை மேற்கொள்வது என்பது அடிப்படை உரிமை கிடையாது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் அமலாக்கத்துறை தரப்பில் கூறியிருந்தது. இதை தனியாக பிரமாண பத்திரமாகவும் தாக்கல் செய்திருந்தது .

இச்சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன்1 ஆம்தேதிவரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த காலங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பரப்புரையில் ஈடுபடலாம் எனவும் இடைக்கால உத்தரவு வழங்கினர்.

அரவிந்த் கெஜ்ரிவால்
சென்னை: வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்மணி.. பக்கத்துவீட்டு இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

நிபந்தனைகள் என்ன?

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்ததை அவரது கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள். ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் முன்பாக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் என்னவென்று பார்க்கலாம்.

1. அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு பிறகு ஜூன் ஒன்றாம் தேதி வரை தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட முடியும் .

2. ஜூன் இரண்டாம் தேதி கெஜ்ரிவால் மீண்டும் சிறையில் சரணடைய வேண்டும்

3. ஐம்பதாயிரம் ரூபாயை பிணைத்தொகையாக உத்தரவாத கையொப்பத்துடன் சிறை நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்

4. முதலமைச்சர் அலுவலகம் மற்றும் டெல்லி தலைமைச் செயலகம் ஆகியவற்றிற்கு செல்லக்கூடாது

அரவிந்த் கெஜ்ரிவால், உச்சநீதிமன்றம்
அரவிந்த் கெஜ்ரிவால், உச்சநீதிமன்றம்pt web

5. இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தால் துணைநிலை ஆளுநரின் அறிவுறுத்தல் இல்லாமல் எந்த கோப்புகளிலும் கையொப்பமிட மாட்டேன் என உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதி கடைப்பிடிக்கப்பட வேண்டும்

6. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக எந்த விதமான கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது

7. வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சியங்கள் யாருடனும் உரையாடக்கூடாது

8. வழக்கு தொடர்பான கோப்புகளை கையாள்வதற்காக எந்த அரசு

அதிகாரியையும் அணுகக் கூடாது என்ற நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்
குஜராத் | நீட் தேர்வில் முறைகேடு... தேர்வு மைய துணைக் கண்காளிப்பாளர் உட்பட மூவர் கைது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com