[X] Close

ஜனவரி 9-ல் அதிமுக செயற்குழு - பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு,தேர்தல் களம்

AIADMK-Executive-Committee--General-Committee-meeting-on-January-9

ஜனவரி 9-ல் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் “அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் ஜனவரி 9-ஆம் தேதி காலை 8.50 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில்  அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.


Advertisement

செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை சான்றிதழோடும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடனும் கலந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close