[X] Close

ஆர்ஆர்ஆர் பட ஷூட்டிங்கில் இணைந்த ஆலியா பட் - உற்சாகமுடன் வரவேற்ற ராஜமெளலி!

சினிமா

RRR-Director-SS-Rajamouli-Welcomes-Alia-Bhatt-On-Set

ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் (ரத்தம், ரணம், ரெளத்திரம்) படத்தின் ஷூட்டிங்கில் பாலிவுட் முன்னணி நடிகை ஆலியா பட் இணைந்திருக்கிறார். இதனை புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் ராஜமெளலி ’மிகவும் அன்பான அழகான எங்கள் சீதாவுக்கு மிகவும் அன்பான வரவேற்பு’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


Advertisement

image

’மஹதீரா, நான் ஈ, பாகுபலி படங்களின் மூலம் தமிழ், தெலுங்கு, இந்தி பட ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி. இவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி இந்தியா மட்டுமல்லாது உலகளவில் வசூல் சாதனை செய்தது.உலக இயக்குநர்களுக்கே தொழில்நுட்பத்தில் சவாலாய் அமைந்தது பாகுபலி.


Advertisement

image

இவரது அடுத்தப்படமான ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரணுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். ஏற்கனவே, ராஜமெளலி மூன்று படங்களில் ஜூனியர் என்.டி.ஆருடன் பணியாற்றியுள்ளார். ராம் சரணுடன் மஹதீரா படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார்.


இப்படத்தில் பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கானும், நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி உள்ளிடோர் நடிக்கவிருக்கிறார்கள். கொரோனா சூழலால் தடைப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக ஹைதராபத்தில் நடந்து வருகிறது. தற்போது, ஆலியா பட் காட்சிகள் எடுக்கப்படவுள்ளதால் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் ஆலியா பட் கலந்துகொண்டுள்ளார். அவருடன் ராஜமெளலி நின்று பேசிக்கொண்டிருக்கும் கேஷுவல் புகைப்படங்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.


Advertisement

Advertisement
[X] Close