Published : 11,Jul 2017 05:49 AM

இது பாவனாவுக்கு கிடைத்த வெற்றி: திலீப் கைது பற்றி ரம்யா நம்பீசன்!

Remya-Nambeesan-on-Dileep-s-arrest

நடிகை பாவனா விவகாரத்தில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டதை நடிகை ரம்யா நம்பீசன் வரவேற்றுள்ளார்.

கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, கடத்தப்பட்ட பாவனா காரிலேயே  பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார். அடுத்த சில நாட்களில் அந்த கார் டிரைவர் மார்ட்டின், பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், திடீர் திருப்பமாக, நடிகர் திலீப் நேற்று கைது செய்யப்பட்டார்.  கொச்சி அங்கமாலியில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஆலுவா சிறையில் அடைக்கப்படுகிறார்.
அவரது கைது பற்றி கருத்துத் தெரிவித்துள்ள நடிகை ரம்யா நம்பீசன், ’எனது உணர்ச்சியை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று உடனடியாகத் தெரியவில்லை. கேரள போலீசுக்கு ஹாட்ஸ் ஆஃப். இது பாவனாவுக்கு கிடைத்த வெற்றி. என்ன நடந்தாலும் நாம் பாவனாவுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி’ என்று கூறியுள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்