Published : 04,Nov 2020 06:05 PM
‘மாபெரும் வெற்றி..’ ட்ரம்பின் பதிவை நீக்கிய ட்விட்டர்!

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.270 இடங்களை கைப்பற்றினால் ஆட்சியை பிடிக்கலாம் என்ற நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் 238 இடங்களையும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப் 213 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘’நாம் மாபெரும் வெற்றியை எதிர்நோக்கியுள்ளோம். ஆனால் அவர்கள் தேர்தலில் சதி செய்ய முயற்சிக்கின்றனர்.ஒருபோதும் அவர்கள் சதி செய்ய விடமாட்டோம். வாக்கு சாவடிகள் மூடப்பட்ட பிறகு வாக்களிக்க முடியாது! என ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் ட்ரம்பின் இப்பதிவை ட்விட்டர் அதிரடியாக நீக்கியுள்ளது. "இந்த ட்விட் ட்விட்டரின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது. இது தேர்தல் செயல்பாட்டை தவறாக வழிநடத்தக்கூடும்" என்று ட்விட்டர் விளக்கமளித்துள்ளது.