[X] Close

திண்டுக்கல் அருகே இரண்டு பேர் அடித்துக் கொலை

Two-Killed-near-Dindigul

திண்டுக்கல் அருகே இரண்டு பேர் அடித்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

திண்டுக்கல் சிறுமலை அடிவாரத்தில் உள்ள தென்றல் நகர் காட்டு பகுதியில் இன்று காலை இரண்டு நபர்கள் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தனர். இதனைக் கண்ட அந்த பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இரண்டு பேரை மர்ம நபர்கள் யாரோ கல்லால் அடித்து கொலை செய்து காட்டு பகுதியில் போட்டு சென்றதாக கூறுகின்றனர். கொலை செய்யபட்ட இரண்டு நபர்களில் ஒருவர் குமார் என்பது தெரிய வந்தது. மற்றொருவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இரட்டை கொலை தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close