Published : 08,Jul 2017 05:30 AM

அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது - ப.சிதம்பரம்

country-witnessing-emergency-now-p-chidambaram

தற்போது அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மூத்த பத்திரிக்கையாளர் சாகரிகா கோஸ் எழுதிய 'இந்திராகாந்தி - இந்தியாவின் வலிமைமிக்க பிரதமர்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ப.சிதம்பரம், "இந்திரா காந்தி காலகட்டத்தில் ஜே.பி.நாரயணனின் இயக்கத்தால் சட்டம் ஒழுங்கு குறித்த அச்சம் இருந்தது உண்மைதான். ஆனால், இந்திரா காந்தியின் அவசர காலப் பிரகடன முடிவு தவறானது. இருப்பினும் இந்திரா காந்தி தைரியமாக தேர்தலை எதிர்கொண்டார்.

தற்போது அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது. தற்போது அரசியல் தலைவர்கள் மிரட்டப்படுகிறார்கள், ஊடகங்கள் ஒடுக்கப்படுகின்றன. புலனாய்வு அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுகிறது. திட்டமிட்டு நடத்தப்படும் கும்பல் தாக்குதல் அதிகரித்து வருகிறது. கும்பல் தாக்குதலில் ஈடுபடும் மதவாதிகள், பிரதமர் உட்பட ஒருவருக்கும் பயப்படுவதில்லை. பசுவின் பெயரால் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று பிரதமர் மோடி பேசும் அதே நேரத்தில் ஜார்க்கண்டில் ஒருவர் கொல்லப்படுகிறார். பிரதமருக்கு போலீஸும் பயப்படுவதில்லை, தாக்குதல் கும்பலும் பயப்படுவதில்லை. இதுதான் என்னை அச்சமடையச் செய்கிறது என்று சிதம்பரம் கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்