Published : 14,Oct 2020 04:08 PM
ஐதராபாத் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் மனிதர்: பதைபதைக்க வைக்கும் வீடியோ

கனமழையால் ஹைதராபாத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் மனிதர் ஒருவர் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் பதைபதைக்க வைக்கின்றன.
கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் பெய்த பெரு மழையால் தலைநகரான சென்னையே வெள்ளத்தில் மிதந்தது. பலர் வீடுகளை இழந்தும், பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் உயிரிழந்தார்கள். அதேபோல, தற்போது ஹைதராபாத்தில் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
The most scary visual of the #HyderabadRains, from the Old city. #HyderabadFloodspic.twitter.com/QS5xyoHdYC
— T S Sudhir (@Iamtssudhir) October 14, 2020
ஆந்திராவின் காக்கிநாடா அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றுக் கரையைக் கடந்ததால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கனமழை பெய்து தொடர்ச்சியாக பெய்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு 24 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளதால், ஹைதராபாத் முழுக்க வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை ஒரு குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்,
இந்நிலையில், ஹைதராபாத் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் மனிதரின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், முக்கிய கட்டிடங்கள் நிறைந்த சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில், அந்த மனிதர் அடித்து செல்லப்படுகிறார். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அருகில் இருந்த மின்கம்பியை பிடிக்கவும் முயற்சிக்கிறார். ஆனால், வெள்ளத்தின் வேகத்தில் நிலைகுலைந்து மூழ்கும் அந்த மனிதர் காப்பாற்றப்பட்டாரா? இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது.