Published : 06,Jul 2017 11:49 AM

கன்னட திரையுலகில் அறிமுகமாகும் அக்‌ஷரா 

Akshara-Haasan-Act-in-Kannada-Flim

அமிதாப் பச்சன், தனுஷ் நடித்த ஷமிதாப் படம் மூலம் நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் பாலிவுட்டில் கால்பதித்தார். பாலிவுட்டில் அறிமுகமாகி சில ஆண்டுகள் கடந்துவிட்டாலும், தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டாமல் இருந்தார் அக்‌ஷரா. 
அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் வாய்ப்பு வந்தபோது, தனது எண்ணத்தை மாற்றிக்கொண்ட அக்‌ஷரா, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். மேலும், இந்தி படம் ஒன்றிலும் அக்‌ஷரா நடித்து வருகிறார். இந்த நிலையில், நாகசேகர் இயக்கத்தில் விக்ரம் ரவிச்சந்திரன் எனும் புதுமுக நாயகன் நடிக்கும் கன்னடப் படத்தில் நடிக்க அக்‌ஷராவிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இவர் கன்னட திரையுலகின் கிரேஸி ஸ்டார் என்றழைக்கப்படும் ரவிச்சந்திரனின் மகன் ஆவார். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் அந்த படத்தின் கதை அக்‌ஷராவுக்குப் பிடித்துப் போக, அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்