ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவுக்கு 229 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களம் இறங்கினர். ஆரம்பத்திலேயே சரவெடியாக வெடித்தனர். இதையடுத்து 16 பந்துகளுக்கு 26 ரன்கள் எடுத்து தவான் ஆட்டமிழக்க, அதையடுத்து களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியில் கூட்டணி சேர்ந்தார்.
பிரித்வி ஷா 41 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸ் அடித்து 66 ரன்களை குவித்தார். அவரைத்தொடர்ந்து பண்ட் 17 பந்துகளில் 38 ரன்களை எடுத்தார். ஆட்டத்தின் இறுதி வரை களத்தில் நின்று ஸ்ரேயாஸ் ஐயர் பட்டையை கிளப்பினார். 38 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 228 ரன்கள் எடுத்துள்ளது. 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை கொல்கத்தா அணிக்கு டெல்லி அணி நிர்ணயித்துள்ளது. கொல்கத்தா பவுலிங்கை பொருத்தவரை வருண் சக்கரவர்த்தி, கமலேஷ் நாகர்கொடி தலா ஒரு விக்கெட்டையும் ரஸல் 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!