திடீர் மழைக்கு காரணம் என்ன? பிரதீப் ஜான் விளக்கமும், 9 மாவட்டங்களுக்கான வானிலை மைய அறிவிப்பும்!

நேற்று திடீரென பெய்த மழைக்கான காரணம் என்னவென்று விளக்குகிறார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.
பிரதீப் ஜான்
பிரதீப் ஜான் முகநூல்

கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்த சூழலில் பல இடங்களில் பலத்த காற்றோடு கூடிய கனமழை பெய்துள்ளது. முன்னதாக கோடைக்காலத்தில், மழைக்கான வாய்ப்பு குறிப்பாக சென்னை உள்ளிட்ட இடங்களில் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இருப்பினும் இது எல்-நினோ ஆண்டு என்பதால் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில், பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது.

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

பிரதீப் ஜான்
பிரதீப் ஜான்pt web

இந்த திடீரென மழைக்கான காரணம் என்ன என்று நம்மிடையே விளக்குகிறார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான். அவர் கூறுகையில்,

நேற்று மாலை வெப்பச்சலனம் காரணமாக ஹைதராபாத் பகுதியில் மழை மேகங்கள் உருவாகின. இந்த மேகங்கள் கிட்டதட்ட 15 மணி நேரம் நீடித்து ஆந்திரா வழியாக தமிழகத்திற்கு இன்று காலை 4 மணி அளவில் வந்தடைந்தது.

பின் அந்த அடர்ந்த மேகங்கள் திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களை சென்றடைந்தது. இதில் மழை மேகங்களின் சிறுபாகங்கள் சென்னை உள்ளிட்ட இடங்களில் வந்ததால் 1- 5 மிமீ வரை மிதமான மழை பெய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

பிரதீப் ஜான்
தமிழ்நாட்டு மக்களுக்கு குட் நியூஸ் | அடுத்த 2 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை!

9  மாவட்டங்களுக்கு மழைக்கான எச்சரிக்கை

தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை
தமிழகத்தில் மழைpt web

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் , கடலூர் ஆகிய இடங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதீப் ஜான்
சென்னையை குளிப்பாட்டிய மழை... குறிசொன்ன பிரதீப் ஜான்... வரப்போகுது குளுகுளு கோடை!

கடும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில், கோடை மழையின் வருகை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 மாவட்டங்களில் மழையே இல்லை!

தமிழகத்தில் மார்ச் 1 முதல் இன்று வரையிலான பருவத்தில் 66% குறைவாக மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக பெய்ய வேண்டிய மழை 7.7 செ.மீ என்ற நிலையில், 2.6 செ.மீ மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் சென்னையை பொறுத்தவரை, 99% பருவமழை குறைவாக பதிவாகியுள்ளது. அதேநேரம் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பதிவாகவே இல்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com