‘கொரோனாவுக்கு புதிய தடுப்பூசிகள் வந்துவிட்டதால்...’ ஆஸ்ட்ராஜெனகா எடுத்த திடீர் முடிவு!

புதிய தடுப்பூசிகள் வந்துவிட்டதால், கோவிஷீல்டு தடுப்பூசியைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம் என்று இத்தடுப்பூசியை தயாரித்த ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆஸ்ட்ராஜெனகா
ஆஸ்ட்ராஜெனகா முகநூல்

ஆஸ்ட்ராஜெனெகா (ASTRAZENECA) நிறுவனமும், ஆக்ஸ்போர்டு (OXFORD) பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியானது வக்ஸ்செவ்ரியா, கோவிஷீல்டு என்று பல்வேறு பெயர்களில், இந்தியா உட்பட பல்வேறு நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டதால், பக்க விளைவுகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாகவும், அதில் பலர் மரணம் அடைந்ததுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு சமீபத்தில் பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் 51 வழக்குகள் தொடரப்பட்டன. இந்தியாவை பொறுத்தவரை சீரம் நிறுவனத்தால் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியால் டி.டி.எஸ் எனப்படும் ரத்தம் உறைவு மற்றும் ரத்த தட்டணுக்கள் குறைதல் போன்ற பக்கவிளைவு மிக மிக அரிதாக ஏற்படும் என அஸ்ட்ரெஜென்கா நிறுவனம் இங்கிலாந்து நீதிமன்றத்தில் கூறியிருந்தது. இந்த அறிவிப்பு கொரோனாவிற்கு தடுப்பூசி செலுத்திய அனைவரிடமும் பெரும் பயத்தினை ஏற்படுத்தியது.

ஆஸ்ட்ராஜெனகா
“கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும்” - நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனெகா ஒப்புதல்!

இதற்கிடையே ‘இந்தியாவிலும் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதா’ என ஆய்வுசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்ட்ராஜெனகா
“பக்கவிளைவையும் நன்மையையும் சேர்த்து புரிஞ்சுக்கணும்”-கோவிஷீல்டு தடுப்பூசிகுறித்து முதுநிலை விஞ்ஞானி

இந்நிலையில், கொரோனா வைரஸின் ‘புதிய வேரியன்ட்களுக்கு புதிய தடுப்பூசிகள் வந்துவிட்டதால் , நாங்கள் தயாரித்த தடுப்பூசிகளை திரும்பப்பெற்றுக்கொள்கிறோம்’ என்று கோவிஷீல்டை தயாரித்த ஆஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தற்போது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

AstraZeneca
CovishieldVaccine
AstraZeneca CovishieldVaccine

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உலகம் முழுவதும் 3 பில்லியன் கோவிஷீல்டு டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த முதல் ஆண்டில் மட்டும் சுமார் 65 லட்சம் மக்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். மேலும், புதிய தடுப்பூசிகள் வந்துவிட்டதால் , ஜூன் 2021-க்குப் பிறகு நாங்கள் தயாரித்த தடுப்பூசிகள் பயன்பாட்டிலிருந்து குறைக்கப்பட்டுவிட்டன.

எங்களின் உழைப்பு உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, மேலும் உலகளாவிய தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஒரு முக்கிய அங்கமாக நாங்கள் இருந்திருக்கிறோம். இந்நேரத்தில் கொரோனாவின் புதிய வேரியன்ட்களுக்கு புதிய தடுப்பூசிகள் வந்துவிட்டதால் , நாங்கள் தயாரித்த தடுப்பூசிகளை திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்றைய தினம் ஐரோப்பிய மெடிக்கல் ஏஜென்சி, இந்த குறிப்பிட்ட தடுப்பூசிகளை இனி பயன்படுத்தக்கூடாது என அறிவித்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானதுதான் என்றாலும், வெகு அரிதாக சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்துகிறது என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

ஆஸ்ட்ராஜெனகா
கோவிஷீல்டு பக்கவிளைவு விவகாரம் | “10 லட்சத்தில் 7 பேருக்கு மட்டுமே ரத்த உறைவு அபாயம்”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com